பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமியின் இறையதுபவம் 89 விரும்புதலை எதிர்பாராமல் "தாவியன்றுலகமெல்லாம் தலைவிளாக் கொண்டான்" (6) வனத்திடரை எரியாக வெட்டியாயிற்று. நீ மழை பெய்தாக வேண்டும்' என்று வளைப்பிடவொண்ணாதது மேகம்; எம்பெருமான் படியும் இங்ங்னமாயிறே" "பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா ஆழியூழித் தவஞ் செய்தார் வெள்கி நிற்ப, விண்ணுளர் வியப்ப வந்து ஆனைக்கன்றருள வந்தவனிறே” (7) ஜலஸ்தல விபாகமின்றியே பெய்யும் மேகம். வேடன், வேடுவச்சி, பட்சி, குரங்கு, சராசரம், இடைச்சி, இடையர், தயிர்த்தாழி, கூனி, மாலாகாரர், பினவிருந்து வேண்டடிசிலிட்டவர், அவர் மகன், அவன் தம்பி ஆனை அரவம், மறையாளன் பெற்ற மைந்தன்" என்னும் படியிறே பகவத விஷயீகாரம் பெற்றவர்களிருப்பது. (8) மேகம் சரத் காலத்தில் பெரு முழக்கமிட்டுப் போய் விடும், மழை பெய்யாது; பெய்யுங்காலத்தில் ஆடம்பரமின்றிப் பெய்யும். எம்பெருமான் குசேலனுக்கு அருள் செய்தபடி இங்ங்னேயிறே. 20. திருமாலை-35, 21. இரண். திருவந். 16 22. திருமாலை - 44 23. ஆசா. ஹிரு. 228 (புருடோத்தம நாயுடு பதிப்பு), வேடன்குகன்; வேடுவிச்சி - சபரி: பட்சி - சடாயு, - சுக்கிரீவன், சராசரம் - அயோத்தியில் வாழும் சராசரம், இண்டச்சி சித்தயந்தி, இடையர் - ததிபாண்டன், தயிர்த் தாழி - ததிபாண்டனுடைய தாழி, கூனி கிருஷ்ணாவதார்த்தில் கண்ணனுக்குச் சந்தன்ம் தந்தவள்; மாலாகாரர் - கண்ணன் காலத்து - பக்தர்; பினவிருந்து - இதையிட்ட கண்டாகர்ணன்; வண்டடிசில் இட்டவர் - பக்தவிலோசன ரிஷிபத்தினிகள்; அவன் மகன் - பிரகலாதன், அவன் தம்பி - வீடணன்; ஆனை - கசேந்திராழ்வான்; அரவம் - சுமுகன், மறையாளன் - கோவிந்த சாமி, பெற்ற மைந்தன் - மார்க்கண்டேயன் - ஆக பதினெண்மர்.