பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபிகையின் நயப்பகுதிகள் 103 பிள்ளை தேவ பெருமாள் அரையர் இப்பாசுரத்தைச் சேவிக்கையில் 'உன் தாமரைக் கண்களால் நோக்காய்' என்று ஒரு தடவை சொல்லி நிறுத்தாமல் நோக்காய், நோக்காய், நோக்காய்....' என்று பலகாலும் சொல்லிக் கொண்டிருந்து மேலடியிலே போகமாட்டாதே நின்றாராம். அப்போது கோஷ்டியிலே வீற்றிருந்த 6 ہوئےaل J 5[ திருத்தந்தையாரான ஆழ்வர் திருவரங்கப் பெருமாளரையர் எழுந்திருந்து "பிள்ளாய் நீ எம்பெருமான் திருவுள்ளம் புண்படும்படி இங்ங்னம் பலகாலும் சொல்லி நிர்ப்பந்திக்கலாமோ? அழகிய மிடற்றைத் தந்து, நல்ல பாசுரத்தைத் தந்து, பிள்ளைகளையும், செல்வத்தையும் தந்தருளியிருக்க ஒன்றும் செய்யாதாராக நினைந்து இன்னமும், நோக்காய் நோக்காய் .... என்றால் இஃது என்னே! மேலே பாடு என்றாராம். ஐதிகம் - 9 : 'கெடும் இடராய எல்லாம் கேசவா என்ன (திருவாய் 10.12:1) என்ற பாசுரத்தின் கொடுவினை செய்யும் கூற்றின் என்ற அடியின் பொருளுரைக்கும்போது வருவது:யமனுடைய துன்பத்திற்கு அஞ்ச வேண்டா என்னுமதற்கு ஐதிகம் காட்டுகிறார் ஈட்டாசிரியர். ஒரு திரு வேட்டையிலே பட்டர் திருவூற்றங்கரையிலே பேரோலக்கமாக இருக்க, மாலைப் பொழுது ஆயிற்று' என்று சிலர் விண்ணப்பம் செய்ய, "நாம் பெருமாள் அழகிலே துவக்குண்டு இன்று ஒரு நாளும் செய்ய வேண்டிய காரியத்திலே சிறிது தாழ்கின்றோம் என்றால் இது குற்றமாக எமன் கேட்கவோ? ஓர் அரசன் இருந்து நாட்டுக் கணக்கு கொடுவராநின்றால் அரசனுக்கு அந்தரங்கனாய் இருப்பான். ஒருவன் பெயரை வாசித்தால். 'ஓம் காண் அது கிடக்க: மேலே செல் என்றால், பின்னை ஒரு நாளும் அப்பெயரை எடுத்து வாசிக்கப்பெறான் காண்; இந்த விஷயத்திலே 'உனக்காகிக்தொண்டு பட்ட, நல்லேனை வினைகள்