பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் நலியாமை நம்பு தம்பி" என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பாசுரம் அறியீர்களோ? அவனுக்குக்காகத் தொண்டுபட்டுப் போது போக்குபவர்களை வினைகள் நலியுமோ? என்று அருளிச் செய்தாராம். ஐதிகம் - 10 : புண்ணியம் செய்து நல்ல (திருவாய் 10.2:5) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் 'எந்தை நாமம்’ என்பதிலுள்ள ஐதிகம். இடறினவன் 'அம்மே என்னுமாறு போல திருநாமம் சொல்லுவதற்கு ஒரு தகுதியைத் தேடிக் கொள்ள வேண்டா. நஞ்சீயர், "திருநாமம் சொல்லும்போது பக்தியுடையவனாய்க் கொண்டு சொல்ல வேண்டுமோ?" என்று பட்டரைக் கேட்க, கங்கையிலே ,முழுகப் போமவனுக்கு வேறு ஓர் உவர்க்குழியிலே முழுகிப் போகவேண்டுமோ? மேல் உண்டான நன்மையைத் தருகிற இது தகுதியையும் தரமாட்டாதோ? என்று அருளிச் செய்தாராம். திருநாமம் சொல்லுகைக்கு ருசியே ஆயிற்று வேண்டுவது; அவர்களே அதிகாரிகள். ஐதிகம் - 11 : கடுவினை களையலாகும் (திருவாய். 10.2:8). என்ற பாசுரத்தில் படமுடை அரவில்... சொன்னோம். (3-4 அடிகள்) என்ற அடிகளில் அநுசந்திக்கும் ஐதிகம். ஆளவந்தார்க்கு எல்லாப் பொருளையும் உபதேசித்த மணக்கால் நம்பி யோகரகஸ்யம் மாத்திரம் குருகைக் காவலப்பனிடத்திலே பெறக் கடவீர்!" என்று சாதித்திருந்த படியாலே, ஒருகால் அதனை நினைத்துக் குருகைக் காவலப்பனிடம் சென்று 'அடியேனுக்கு யோக ரகஸ்யத்தை அருளிச் செய்ய வேண்டும் என்று வேண்டினார். அவரும் ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாளில் வந்து உபதேசம் பெறுமாறு சொல்லிப் போகவிட்டார். ஆளவந்தாரும் நம்பெருமாள் சந்நிதிக்கு எழுந்தருளினார். அந்தச் சமயம் திருவத்யயநோத்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 4. பெரி.திரு.6.3:9