பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் சிவபெருமான் பூமியைத் தேராகவும், சந்திர சூரியர்களைத் தேர்ச் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களைக் குதிரை களாகவும், பிரமனைச் சாரதியாகவும், மகாமேருவை வில்லாகவும், ஆதிசேடனை வில் நாணாகவும், திருமாலை வாயுவாகிய சிரகமைத்துக் கொண்ட அம்பாகவும் கொண்டு போருக்குத் தயாராகச் சென்று போர் தொடங்கும்போது சிரித்து அச்சிரிப்பினின்று உண்டான தீயினால் அவ்வரசுரர்களையும் அந்நகரங்களையும் எரித்திட்டனன். இதிகாசம் - 9 : மேற்படி பாசுரத்தில் இலங்கு வெங்கதிரோன்தன் சிறுவன் : (மூன்றாம் அடி) என்பதிலுள்ள இதிகாசம். மேரு மலையில் நான்முகன் யோகம் பயின்று கொண்டிருக்கையில் அவர் கண்களில் நீர்த்துளித் ததும்பியது; அதை அவர் கையாலெடுத்துக் கீழே எறிந்தனர். இந்நிலையில் அஃது ஒரு குரங்காக மாறியது. அக் குரங்கு நான்முகனுக்கு ஒப்பான மகிமையும் மிக்க வேகமும் உடையோனாகி அம் மலையில் மரங்களும் கனிவகைகளும் நிறைந்த மரங்களடர்ந்த வனங்கள் தோறும் தாவித் திரிந்து விளையாடிக் காலம் கழித்தது. அஃது ஒருநாள் நாவரண்டு நீர் வேண்டி அம்மலையில் வடபால் சென்றது. அங்கு ஓர் தடாகத்தைக் கண்டு அதன் கரையில் நின்று தண்ணீரை எட்டிப் பார்த்தது. அதனுள் தன் நிழல் தோன்றுவதைக் கண்ணுற்றுத் தனக்குப் பகையான மற்றொரு வானரம் அக்கயத்தினுள் குடி கொண்டு தன்னை இகழ்கின்றது எனக் கருதியது. அதனை கொல்வான் வேண்டி அம் மடுவில் குதித்தது. குளத்தில் விழுந்து மெல்ல நீந்திக் கரையேறியதும் அஃது ஓர் அற்புதமான அணங்காக மாறியது. காண்போர் மனத்தைக் கவரவல்ல பொற்கொடியென ஒரு பெண்மணி தனது வடிவழகினால் எல்லாத் திசைகளையும் ஒளிபெறச் செய்து கொண்டு அப்பொய்கைக் கரையில் நிற்குங்கால் தேவேந்திரன் நான்முகனிடம் சென்று அவரை அடிபணிந்து பூசித்துத் திரும்பி அவ்வழியாக வந்து