பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபிகையின் நயப்பகுதிகள் 119 கொள்வதோடு எம்பெருமான் பக்கல் ஈடுபடுவதிற் பரமபதத்து நித்திய சூரிகளைப் போலுதலால் இப்படிப்பட்டடவர்கள் 'சிறுமாமணிசர் என்னத் தக்கவர்கன்றோ? இங்ங்னமே வடிவு சிறுத்து மகிமை பெருத்தவர்களும், மனிதர் என்று பார்க்கும் போது சிறுமை தோன்றினும் பகவத் பக்தி, ஞானம், அநுட்டானம் முதலிய நற்குணங்களை நோக்குமளவில் நித்திய முக்தர்களிலும் மேன்மை பெற்று விளங்குபவர் களுமான மகாபுருஷர்களையே ஆழ்வார் சிறுமாமனிசர்" என்று குறித்தருளினார் என்று அருளிச் செய்ய, பட்டரும் அது கேட்டுத் தகும் தகும் என்று இசைவு கொண்டனர். இதிகாசம் -12 : "தமருகந்த தெவ்வுருவம் (முத. திருவந், 44) என்ற பாசுரம் : தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே தமருகந்த தெப்பேர் மற்றப்பேர் - தமருகந்து எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே அவ்வண்ணம் ஆழியான் ஆம் இப்பாசுரம் பொய்கையார் அருளிச் செய்தது. அடியார்கள் இறைவனுக்கு அடிமை செய்யும்போது எந்த உருவத்தையும் எந்தத் திருப்ப்ெயரையும் உகந்திருப்பர்களே அந்தத் திருவுருவத்தையும் அந்தத் திருநாமத்தையும் அர்ச்சாவதார உருவமுடையவனாய்த் தன்னை அமைத்துக் கொண்டு அவர்களைக் கொள்வான் இறைவன் என்கின்றார் ஆழ்வார். தமர்கள் கல் மண் உலோகங்கள் இவற்றுள் எதனைக் அதனையே இறைவன் தனது ஒப்பற்ற திருமேனியாக ஏற்றுக்கொண்டு அதிலே சந்நிதானம் பண்ணி எழுந்திருப்பன். அந்தத் திருமேனிக்கு எந்தத் திருநாமத்தையிட்டு வழங்குகின்றனரோ அந்தத் திருநாமத்தையே நாராயணாதி நாமங்கள்போல் விரும்பி ஏற்றுக் கொள்வன்.