பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் மற்றும் குணம் சேஷ்டிதம் (அற்புதச் செயல்கள்) முதலியவற்றில் எந்தக் குணசேஷ்டதங்களை அநுசந்தித்து நாள்தோறும் பாவனை பண்ணுவார்களோ அவற்றேயே கொண்டிருப்பன். இவ்வாறு எம்பெருமானின் அர்ச்சாவதார செளலப்பியத்தை இப்பாசுரத்தில் அருளிச் செய்கின்றார். இதிகாசம் : இப்பாசுரம் இராமாநுசரின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியுடன் பொருந்தி அமைகின்றது. இராமாநுசர் திருவரங்கத்தில் வாழ்ந்தபோது ஒரு சமயம் மாதுகரத்திற்கு (பிச்சைக்கு) திருவரங்கத் திருவீதி ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது உள்ளம் முதலாழ்வார்கள் மூவரிலும் முதலாழ்வார் என்று வைணவர்கள் குறிப்பிடும் பொய்கையாழ்வார் அருளிய கீழ்க் குறிப்பிட்ட பாசுரத்தின் பொருள் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தது. இறைவன் தன் உருவில் மனிதனைப் படைத்தான் என்கின்றது கிறித்தவர்களின் சத்திய வேதம் என்பதை நாம் அறிவோம். இதனை மறுத்து மனிதன் தன் உருவில் இறைவனைப் படைத்து விடுகின்றான் என்று அறிவியல் மனப்பான்மை தெரிவிக்கின்றது என்பதும் நமக்குத் தெரியும். இந்த வகை மனநிலைகளையும் சமரசப்படுத்துவதுபோல் அமைந்துள்ளது. பொய்கையாழ்வாரின் அருள்வாக்கு. இவ்வாறு சிந்தித்துக் கொண்டே உடையவர் வீதி வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அப்போது தெருப் புழுதியில் சில பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். திருவரங்கத்துச் சிறுவர்கள் அல்லவா? திருக்கோயிலில் தாங்கள் கண்டவற்றை தங்கள் விளையாட்டிலும் பிரதிபலிக்கச் செய்தனர். பாவனை சிறுவர்கள் விளையாட்டின் முக்கிய கூறு என்பதை உளவியல் அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ஆண்பிள்ளைகள் அப்பா விளையாட்டும், பெண் பிள்ளைகள் 'அம்மா விளையாட்டும் இருவரும்