பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் அவன் நலமாக உயிருடன் இருப்பதும், அவன் வெளிநாட்டில் நலமாக இருந்தும் சில வம்பர்கள் 'அவன் இறந்தான் என்று பொய்ச் செய்தி கூறுவதை நம்பி உயிர் விடுவதும் உத்தம நாயகியின் செயல் என்று நினைக்க வேண்டா. உண்மையான நாயக - நாயகியின் உறவு மனமே சாட்சியாக நெஞ்சிற் பதிந்து கிடக்கும். அவன் உயிர் விடும் அதே கணத்தில் இவளுடைய உயிரும் தானாக விட்டு நீங்கும்; தம்பதிகளாகிய இருவரது நெஞ்சுக்கும் வியக்கத்தக்க அழகுடைய ஒரு தந்திப் போக்குவரத்து இருப்பதனாலேயே அந்தத் தந்தியைக் கொண்டே நாயகியின் உயிர் அந்தக் கணத்திலேயே பிரிந்து போகும். மானசத் தந்தி உண்மையான செய்தியை மனத்திற்கு எட்ட வைத்துக் கொண்டேயிருப்பதனால் அதன் காரணமாக உயிர் போகாமல் தரித்து நிற்கும். பிராட்டியும் இத்தகைய உத்தம நாயகியாதலால் இராவணன் மாயத் தலையைக் காட்டி எவ்வளவு வஞ்சித்தபோதிலும், உண்மையில் இராமனுக்கு யாதொரு தீங்கும் நேரிடாமல் இருந்தமையால் அந்த அரக்கனுடைய மாயச்செயல் பயன்படாமல் அவளுடைய மனச்சாட்சியமே வீறு பெற உயிர் தரித்து நின்றது. ஆதலின் பிராட்டி உயிர்தரித்திருந்து பெருமான் உயிர் தரித்திருப்பதற்குக் காரணம் என்று கொள்ளீர்" என்று மறுமொழி பகர்ந்தார். அற்புதமான சம்வாதம். சம்வாதம்-2 'இண்டையாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் வோடும் (பெரிதிரு.2.1:3) என்ற அடியின் பொருளுரைக்கும்போது வருவது இண்டை கொண்டு என்னாமல் இண்டையாயின கொண்டு. என்று கூறுவதன் கருத்து யாது? எனில், எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்க வேண்டுமென்கிற தூய்மையான நோக்கத்துடன் கொள்ளுகின்ற மலர் எதுவாயிருந்தாலும் குற்றம் இல்லை; செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி என்று