பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபிகையின் நயப்பகுதிகள் 127 சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற பூக்களாகவே இருக்க வேண்டும் என்கிற நியதி இல்லை; ஏதேனும் ஒரு பூவாயிருக்கலாம் என்பது தோன்றும். "பூமாலையென்று பேர் பெற்றவற்றைக் கொண்டு” என்று வியாக்கியானித் தருளினார் பெரியவாச்சான் பிள்ளையும். இங்ங்னம் இன்னபூ என்று அறுதியிடாமல் பூ என்று பெயர் பெற்றிருக்கும் எதுவும் பொருந்தும் என்பதாயிற்று. பரிவதில் ஈசனை (1.6:1) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தை எடுத்து விளக்கும்போது புரிவதும் புகை பூவே என்ற சொல்நயத்தைத் திருவுள்ளம் பற்றிப் பட்டர் "இவ்விடத்தில் அகிற்புகை என்றாவது, கருமுகைப்பூ என்றாவது சிறப்பித்துச் சொல்லாமையாலே ஏதேனும் ஒருபுகையும் ஏதேனும் ஒரு பூவும் எம்பெருமானுக்கு அமையும், செதுக்கையிட்டும் புகைக்கலாம் என்று கூறினாராம். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நஞ்சீயர் கண்டகாலிபூ எம்பெருமானுக்குச் சாத்தலாகாது என்ற சாத்திரம் மறுத்திருக்க, 'இப்படி அருளிச் செய்யலாமோ? என்று கேட்டாராம், அதற்கு மறுமொழியாக "சாத்திரம் மறுத்தது மெய்தான், கண்டகாலிப்பூ எம்பெருமானுக்கு ஆகாதென்று மறுக்கவில்லை; அடியார்கள் அப்பூவைப் பறித்தால் கையில் முள் பாயுமே என்று பக்தர்கள் பக்கல் தயையினால் சாத்திரம் நீக்கினதேயன்றி எம்பெருமானுக்கு ஆகாதபூ எதுவும் இல்லை"என்றாராம். இங்ங்னம் இந்த சம்வாதத்தைக் காட்டிய நம் சுவாமி மேலும் குறிப்பிடுவார் "திருவாய்மொழிக்குப் 'பதினெண்ணாயிரப்படி அருளிய பரகால சுவாமி இந்தச் சம்வாதத்தைக் கண்டு இரசிக்காமல் மறுத்துரைத்தது பற்றிக் கவலைகொள்ள வேண்டா. "பக்தி வரம்பு கடந்தால் நூல் வரம்பில்லை என்றதையும் அருளிச் செயல் தொடையழகையும் நோக்கி சுவைப்பொருள் உரைப்பதில் அறிவுடையார்க்குப் பணியன்று என்பதை நாம் உணர்ந்தால் போதும்" என்று.