பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் சீற்றம் பிறப்பதும் உண்டே அங்ங்னே சீற்றம் பிறந்தால் அவ்வபராதத்தைப் பொறுப்பது இப்பிராட்டிக்காக என்க. தம்முடைய உபதேசாதிகளாலே அச்சீற்றத்தை யாற்றி தயையை ஜனிப்பிப்பவள் பிராட்டி, ஆகையாலே சம்பந்த உணர்ச்சியுள்ளவனுக்கும் அபராத பயத்தாலே புருஷகார பரஸ்கரணம் அவசியமேயாகும். பிராட்டியின் புருஷகாரம் அவ்வளவு காரியம் செய்யுமோஎன்னில்: 'அகில ஜகந்மாதரம் என்றபடியே சேதநர்க்கு இவள் மாதாவாய் அந்த சம்பந்தம் அடியாக இவளது வருத்தம் கண்டு பொறுத்திருக்க மாட்டாதே இருக்கிற ஒரு தன்மையும், எம்பெருமானுக்குப் பத்தினியாய் 'பித்தர் பனிமலர்மேல் பாவைக்கும் என்கிறபடியே அவன்தன் வைலட்சண்யத்தைக் கண்டு பிச்சேறித் தம் சொற்படி நடக்கும்படி அபிமத விஷயமாயிருக்கிற ஒருதன்மையும் உடையளாகையாலே இவளுடைய புருஷகாரம் ஒருவகையாலும் விபலமாக மாட்டாது. உலகில் புருஷகாரம் செய்பவர்களுக்கு இரண்டு தன்மைகள் வேண்டும்; எவர் விஷயத்தில் புருஷகாரம் செய்யவேண்டுமோ அவர் விஷயத்தில் நெஞ்சார்ந்த அன்பு இருக்க வேண்டியது ஒன்று யாரிடத்தில் புருஷகாரம் செய்யவேணுமோ அவரிடத்தில் தம்வாக்கு வெற்றி பெற்றே தீரும்படியான வால்லப்யம் இருக்கவேண்டியது மற்றொன்று, இவை இரண்டும் பிராட்டியிடத்தே புஷ்கலம் என்று சொல்லிற்றாயிற்று. இதெல்லாம் உண்மையே ஈசுவரனோ கேட்பாரற்ற சுதந்திரன்; அன்னவன் சேதநருடைய குற்றங்களை நிறுத்து அவற்றுக்குத் தக்கபடி தண்டனை செலுத்தியே தீர்வேன்' என்று நிற்குமளவில் பிராட்டிதான் என்ன செய்யமுடியும்? என்னில்: இது இவளுடைய செய்தியறியாதார் செய்யும் ஆட்சேபமாகும். இவள் சீதையாகப் பிறந்து சிறையிருந்த