பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்யார்த்த தீபிகை-வழிநூல் 139 காலத்தில் இவளைப் பத்து மாதம் இடைவிடாது படாத பாடுகளும் படுத்தின இராட்சசிகளின் கொடுமையை முன்னம் மரத்தின்மேல் மறைந்திருந்து கண்ட அநுமன் 'பெருமாள் வெற்றி பெற்ற பின்பு இவர்களைப் பார்த்துக் கொள்வோம் என்று ஆறியிருந்து இராவணவதமான பின்பு ஓடிவந்து இவ்வரக்கிகளின் அபராதங்களை கணக்கிட்டுச் சித்திரவதம் பண்ண நினைத்திருக்கும் எனக்கு இடம் அளிக்க வேணும்' என்று (பிராட்டியை நோக்கி) கேட்டவளவிலே சொல்மிருங்கனான அவ்வநுமானையும் உட்பட இவள் உபதேசத்தாலே பொறுப்பித்தாள் என்பது பூரீராமாயண பிரசித்தம். அப்படிப்பட்ட இவள் அல்லி மலர் மகள் போகமயக்குளாகியும் நிற்கும் அம்மான் என்கின்ற படியே தம் போக்யதையிலே மிகவும் ஈடுபட்டிருப்பவனாய் 'நின் னன்பின்வழி நின்று சிலைபிடித் தெம்பிரானே' என்கிறபடியே 'மாயாமிருகத்தின் பின்னே போ' என்றாலும் விளைவதறியாதே அதன் பின்னே தொடர்ந்து போமவனாய் இப்படி தனக்கு விதேயனாய் ரஸிகனாய் இருக்குமவனைப் பொறுப்பிக்கவல்லள் என்பதுபற்றிக் கேட்க வேணுமோ! 'உறைமார்பா' என்பதனால் புருஷகாரபூதையான பிராட்டியும் ஈசுவரனுமான இருவருடையவும் சேர்த்தியானது எப்போதும் உண்டென்று காட்டப் பட்டதாகும். ஞானம் ஆனந்தம் முதலியவை எப்படி எம்பெருமானுக்கு ஸ்வரூப நிரூடகங்களோ அப்படியே ரீயபுதித்துவமும் நிரூபகமாகையாலே இவளோடே கூடியே ஈச்வர சதபாவமென்று கொள்க. சேதநர்களின் அபராதங்களைக் கணக்கிட்டுத் தண்டிக்க வல்லவனான எம்பெருமானுடைய சுவாதந்திரியத்தையும் சேதநர்கள் செய்யும் குற்றங்களின் மிகுதியையும் கண்டு 'ஐயோ! என்னாகுமோ!' என்கிற பயத்தாலே எம்பெருமானை விட்டு ஒரு நொடிப்பொழுதும் அகலமாட்டாள். இப்படி இவள் இருந்து நோக்குகையாலே ஈசுவரனுடைய