பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்யார்த்த தீபிகை-வழிநூல் 145 மளவில் வேற்றுமை தோன்றாது, ஒற்றுமை தோன்றும்; இதனையே "உடம்புருவில் மூன்றொன்றாய் என்பதனால் அருளிச் செய்கின்றார். மூர்த்தி வேறாய் நின்றானை: உண்மையில் ஸ்வரூப பேதம் உண்டாகையாலே அதைச் சொன்னபடி ஆக இத்தால் தேறின பொருள்யாதெனில்: "பிரமன், சிவன், இந்திரன், சந்திரன் முதலிய தெய்வங்கள் எல்லாம் நாராயணனே' என்று சாத்திரத்தில் பலவிடங்களில் சொல்லப்பட்டுள்ளது; அவ்விடங்களை எப்படி நிர்வகிக்க வேண்டுமென்றால்: 'பிரமன் முதலிய தெய்வங்களைச் சரீரமாகக் கொண்ட சர்வ சரீரியான சீமந் - நாராயணன் ஒருவனே என்று சொல்லிற்றாக நிர்வகிக்க வேணும்; தெய்வங்கள் பலபல உள்ளனவாக எவ்விடங்களில் சொல்லப் பட்டுள்ளதோ, அவ்விடங்களில், சர்வசரீரியான சீமந் நாராயணனிற் காட்டில் சரீரங்களான தெய்வங்களுக்கு உள்ள ஸ்வரூப பேதம் சொல்லப்படுவதாக நிர்வகிக்க வேணும் - என்கின்ற இந்த அர்த்தம் இப்பாசுரத்தில் முதல் அடியில் காட்டப்பட்டதாகக் கொள்க. பிரமன் சிவன் முதலிய தெவங்களைத் தனிப் படவும் நிறுத்தினது ஏதுக்காகவென்னில்: சிருஷ்டி, சம்ஹாரம் முதலிய சில லோக வியாபாரங்கள் நடைபெறுவதற்காக வென்பார் 'உலகுய்ய என்றார். "வரைமீகானில் தடம் பருகு கருமுகிலை என்பதற்கு நஞ்சீயர் பொருள் சொல்லும்போது வேறுவிதமாகச் சொல்லா நிற்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிள்ளையழகிய மணவாளப் பெருமாளரையர் "இவ்விடத்திற்கு பட்டர் அருளிச் செய்யும் பொருள் இப்படியன்றே" என்று சொல்லி பட்டர் அருளிச் செய்த விசேஷார்த்தத்தை ஸ்மரிப்பித்தாராம்; அதாவது - மலைமேல் காட்டில் உள்ள தடாகங்கங்களில் கன்றுகள் தண்ணி குடிக்கப் புகுங்கால் இளங்கன்று களாகையாலே நீரிலே முன்னேயிறங்கிக் குடிக்க அஞ்சுமாம்;