பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 171 நாளையும் (= எத்தனைகால முடையேம்) என்கிறாள். அறிவு (சொரூப ஞானம்) அடியோடே தொலைந்து எத்தனையோ நாள் ஆயிற்றே என்பது இதன் கருத்து. இங்கே நம்பிள்ளை ஈடு : “மயர்வற மதிநலம் பெற்ற அன்றே போயிற்று நம்முடைய அறிவு. பறவை முதலானவற்றின் (திர்யக்குகள்) காலிலே விழுந்து தூது விட்ட அன்று அது ஞான காரியம் என்றிருந்தாயோ இன்று இருந்து கற்பிக்கைக்கு அன்றே மதியெல்லாம் உள் கலங்கிற்று இல்லையோ? தன் பக்கல் கைவைத்தால் மற்றொன்று அறியாதபடி செய்யும் விஷயமன்றோ? பேரின்பமெல்லாம் துறந்தார், தொழுதார், அத்தோள்' என்னக் கடவதன்றோ? பேற்றினைப் பெறுகின்ற சமயத்திலே இவ்வரு குள்ளவற்றை நினையாதபடி செய்கையே அன்றிக்கே, ஞானம் பிறந்த சமயமே பிடித்தும் இவ்வரு குள்ளவற்றை நினையாமே பண்ணவல்ல விஷயமன்றோ? தன்னையும் அநுசந்தித்து உலக யாத்திரையையும் அநுசந்திக்கும்படியோ அவன் படி" என்பதாம். ஆனாலும் ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்ச வேண்டாவோ என்ன, ஏசறும் ஊரவர் கவ்வை தோழி என் செயுமே என்கின்றாள். ஏசுவதற்கென்றே பிறந்திருக்கின்ற ஊராருடைய பழிமொழிகள் நமக்குப் பழியோ? அதுவே நமக்குத் தாரகம் அன்றோ? என்கின்றாள். அவர்கள் பழி தாரகமாக அன்றோ மடல் எடுக்க இருக்கிறது? தூதுபற்றிய மகள் பாசுரங்கள் : தூது என்பது ஒருவர் தம்முடைய கருத்தை வேறொருவருக்கு இடை நின்ற ஒருவர் வாயிலாகக் கூறி விடுப்பது. சங்க இலக்கியங்களில் காமம் மிக்க கழிபடர் கிளவிகளாக இருந்த துறையே பிற்காலத்தில் தூது கொண்டன என்பது ஆய்வாளர்களின் கருத்து. பக்தி இலக்கியங்கள் வளர்ந்த காலத்தில் ஆழ்வார்