பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 175 4. அர்ச்சையில் : எம்கானல் அகம் கழிவாய் (9.7) இவற்றுள் முதலாவது மட்டிலும் ஈண்டு விளக்கப் பெறுகின்றது. ஏனையவற்றை என் பிறநூல் ஒன்றில் காணலாம்.' வியூகத்தில் துது : 'அஞ்சிறைய மடநாராய் (1.4) என்ற திருவாய்மொழியில் கடல் ஆழி - நீர்தோற்றி அதனுள்ளே கண்வளரும் அடலாழி அம்மானைக் கண்டக்கால் (10) என்பதால் வியூகத்தில் தூது அறியக் கிடக்கின்றது (கடல் - திருப்பாற் கடல் என்பதால்). என் பிழையே நினைந்தருளி (7) என்பதனால் எம்பெருமான் தனது சீல குணத்தால் முதலில் ஆழ்வாருடன் கலந்து விட்டான் கலந்த பிறகு அவரிடமுள்ள குற்றங்களைக் கண்டான். அதனால் அவரை வெறுத்துப் பிரியலுற்றுான். அவனிடத்தில் பொறுக்கும் பண்பு (கூடிமைகுணம்) நிரம்பியிருக்கும்போது ஆழ்வாரின் பிழைகளைப் பொருட்படுத்தக் காரணம் இல்லை. தன்னுடைய பிழைகள் அவனுடைய பொறுக்கும் பண்பையும் மறப்பித்தன போலும் என்று கருதிய ஆழ்வார் நாயகி அப்பெருங் குணத்தைச் சிறிது நினைப்பூட்டி விட்டால் போதும் என்று நினைத்துப் பறவைகளைத் துது விடுகின்றாள். சீதாப்பிராட்டியை ஆயிரக்கணக்கான வானரங்கள் தேடுவதைப் போலவே, தன் கண்களில் கண்டவற்றை யெல்லாம் தூது போகுமாறு ஏவுகின்றாள். ஆழ்வார் நாயகி. பறவைகளைத் தூதுவிடும் ஐதிகத்தைக் குறிப்பிடும் பராசர பட்டர், "சக்கரவர்த்தி திருமகனார் திருவவதரித்த பின்பு வானாசாதி வீறு பெற்றது போல ஆழ்வார்கள் திருவவதரித்த பின்பு பட்சி ஜாதி வீறு பெற்றது." என்று சுவையுடன் அருளிச் செய்வர். இத்திருவாய் மொழியில் நாரை, குயில், அன்னம், அன்றில், குருகு 19. சடகோபன் செந்தமிழ் - 11-ஆம் இயலில் (கழகத்தில் கிடைக்கும்)