பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் வண்டு, கிளி, பூவை ஆகிய பறவைகளைத் தூது விடு வதைக் காண்கின்றோம். ஈண்டு ஓர் இதிகாசம். நஞ்சீயர் காலத்தில் சாமான்ய மாயிருப்பவன் ஒருவன் விரக்தர்களும் வைதிகர்களுமான மகான்கள் பலரும் திருவாய்மொழி காலட்சேபத்தில் இது தத்துவபரமாயிருக்குமென்று கருதித் திவ்விய பிரபந்தத்தைச் சேவிக்க வந்து, இத்திருவாய்மொழியில் வந்தவாறே இது காமுகவாக்கியமா யிருக்கிறது என்று வெறுப்பு காட்டிச் சென்றானாம். வேதாந்தங்களில் விதிக்கப் பெறுகின்ற பகவத்காமமே இப்படிப்பட்ட பாசுரங்களாகப் பரிணமித்த தென்று அவன் அறிந்திலன் கருவிலே திருவில்லாமையாலே என்று நம்பிள்ளை வருந்திப் பேசுவர். பிரிவாற்றாமையுடன் இருக்கும் பராங்குச நாயகி நெய்தல் நிலத்தில் இருக்கின்றாள். பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலன்றோ? நீர் நிலத்தருகே இராநின்ற ஆழ்வார் நாயகி அண்மையிலிருக்கும் நாரையைப் பார்த்து, 'நாராய் நீ என் நிலைமையைக் கருடக் கொடியானுக்கு அறிவித்து என்னையும் அவனையும் சேர்க்க வேண்டும்' என்று இரக்கின்றாள். அஞ்சிறைய மடநாராய் அளியத்தாய் நீயும்நின் அஞ்சிறைய சேவலுமாய் ஆஆ!' என்று எனக்கருளி வெம்சிறைப்புள் உயர்த்தார்க்கு என்விடுதூதாய் சென்றக்கால் வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டால் என்செயுமே (1) என்பது பாசுரம். குழந்தை தாயினுடைய எல்லா உறுப்பு களையும் விட்டு முலையிலே வாய் வைப்பது போல, இங்கு நாரையின் மற்ற உறுப்புகளைவிட்டு அதன் சிறகிலே கண்