பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள்



சுவாமியின் திருமண வாழ்க்கை : 20 வயதுக்கு முன்னரே இல்லற வாழ்க்கையில் புகுந்தவர் நம் சுவாமி. திருமலை அனந்தாண் பிள்ளை வேங்கட வரதாசாரியரின்3 திருமகளான கோமளம்மாள் சுவாமியை மணந்து இல்லக்கிழத்தியானார்கள். சுவாமிக்கு இவர்கள் மூலம் இரண்டே பெண் பிள்ளைகள் பிறந்தனர். இளைய பெண்ணின் கணவர் மணவாள திருமலாசாரியர். இவர்கள் குமாரனும் சுவாமியின் திருப்பேரனுமான செல்வமணி என்கின்ற அரங்கநாதனை சுவீகார புத்திரனாக்கிக் கொண்டார் நம் சுவாமி. சுவாமியின் தர்ம பத்தினி கோமளம்மாளை நடு வயதிலேயே இழக்கும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. முதல் மருமகனான T.A. சம்பத் குமாராசாரியரும் அண்மையில் திருநாடலங்கரித்துவிட்டார். அவருடைய மகனான அனந்தாழ்வானும், செல்வமணியின் மகனான இராஜஹம்சமும் சுவாமிகளுக்கு அன்றாடத் தொண்டு பூண்டொழுகியவர்கள்.

திருமறைக் கல்வி : சுவாமிக்கு திருமறை பயில வேண்டுமென்ற ஆர்வம் இளமையில் இருந்தபோதிலும் அதற்குச் சரியான வாய்ப்பு ஏற்படவில்லை. ஒரு சமயம் சுவாமியின் 22-ஆம் அகவையில் திருமலைக்குச் சென்றிருந்த பொழுது ஆங்கு வேத பாராங்கதரான திருமலை விஞ்சி மூர்மாம் பள்ளம் சுதர்சனாசாரிய சுவாமியைச் சேவிக்க நேர்ந்தது. அவர்தம் கம்பீரமான குரல் எடுப்பும் வேதம் ஓதும் அழகும் சுவாமியை ஈர்த்து விட்டன. சுவாமியின் வேண்டுக்கோளுக்கிணங்கி அந்த ஆசாரியப் பெருமகனாரும் காஞ்சிக்கு எழுந்தருளி சுவாமிக்கு வேதாத்யயனம் கற்பிக்க

 

3. இவர்தம் பேரர்களான திரு. தி.அ. கிருஷ்ணமாசார்யர் சுவாமியும் திரு. தி.அ. கோபாலாசாரிய சுவாமியும் திருப்பதியில் வாழ்ந்து வருகின்றனர். இருவரும் சிறந்த புலவர்கள். சமய சாத்திரங்களைக் கற்றுத் துறைபோகிய வித்தகர்கள். இருவரும் நம் சுவாமியின் அன்புக்கும் ஆசிக்கும் நல்ல பாத்திரர்கள்.