பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் வடமொழிச் சுவையை தென்றமிழ்ப் பயனை மாநிலம் வியப்புறப் பருகித் திடமுறு ஞானக் கொண்டலாய் வளர்ந்து சேதநர் எனும்பயிர் விளைக்கக் கடலுல குவக்க மழைபொழி அண்ணங் கரரவர் திருவடி மலரில் சுடர்முகப் பெற்று வயங்குக என்று.இத் தூயநூல் சமர்ப்பனம் புரிந்தேன். என்ற பாடலால் அன்புப் படையலாக்கி அர்ப்பணித் திருந்தேன். சுவாமியின் சதாபிஷேகம் : இந்த நிலையில் சுவாமியின் சதாபிஷேகம் நடைபெறும் செய்தியை அறிந்தேன். இதனைப் பற்றாகக் கொண்டு மலை நாட்டுத் திருப்பதிகள்' என்ற நூலை விழாவில் அவர் திருவடியில் வைத்து வணங்கி அவர்தம் ஆசியை நேரில் பெறவேண்டும் என்ற உந்தலால் துறையில் விடுமுறை பெற்றுக் காஞ்சியை அடைந்தேன். சதாபிஷேக விழா சிறந்த பெரிய விழாவாகக் கொண்டாடும் (31.3.71 முதல் 10.4.71 வரை 10 நாட்கள்) வகையில் அமைந்திருந்தது. திவ்வியப் பிரபந்த வேத பாராயணங்களும், சொற்பொழிவுகளும் நடைபெற்ற வண்ணம் இருந்தன. இந்த நிலையில் காஞ்சி சென்ற அடியேன் போந்த நிலையை விவரங்களுடன் ஆள்மூலம் தெரிவித்தேன். சுவாமி எழுந்து அறை வாயிலுக்கு வந்தார்கள். நூலை அவர்தம் பாதார விந்தங்களில் வைத்து வணங்கினேன். மகிழ்ந்து ஆசி கூறி அன்றைய நிகழ்ச்சியிலும் கலந்து