பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்க்கையும் மேற்கல்வியும் பிறவும் 23 உணவும் கொண்டு செல்லுமாறு பணித்தார். அங்ங்ணமே செய்தேன்.' முன்னதாகவே தில்லி மாநகரிலும் 21.3.71 இல் சதாபிஷேகச் சிறப்புகளும் சுவாமியின் சேவைக்குப் பாராட்டுக் கூட்டங்களும் நடை பெற்றன. தில்லி மாநகரிலுள்ள சுவாமியின் சீடர்களும் பல பிரமுகர்களும் உயர்நீதி, உச்சநீதி மன்றங்களின் நீதியரசர்களும் அரசு அதிகாரிகளும் கூட்டங்களில் கலந்து கொண்டு கூட்டத்திற்குப் பெருமையும் பொலிவும் சேர்த்தனர். திருவல்லிக்கேணி நிகழ்ச்சிகள்: சுவாமியின் சதாபி ஷேகத்தைக் கொண்டாட வேண்டுமென்று திருவல்லிக் கேணியில் ரீமத் பரமஹம்ச பூரீமத் நாராயண ராமாநுஜ ஜீயர் சுவாமி தலைமையில் ஒரு குழு அமைக்கப் பெற்றுச் செயற்பட்டது. 11.4.1971 அன்று சுவாமி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சந்நிதிக்கு எழுந்தருளினார். அப்பொழுது அங்கே ஆசாரிய பெருமகனார்களுக்கு வழங்கப்பெறும் சிறப்பு மரியாதையாக பஞ்ச முத்திரை பூரீ சடகோபன் சாதிக்கப் பெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ரீமத் பரமஹம்ச திருமலை திருப்பதி பெரிய சீயர் சுவாமி காஞ்சி வாதிகேசரி அழகிய மணவாள சீயர் சுவாமி ஆகியோர் எழுந்தருளியிருந்தனர். பின்னர் திருக்கோயில் திருமண்டபத்தில் ஒரு பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. 14. பல சிறுவர்களும் இளைஞர்களும் பிரபந்தப் பாசுரங்களைச் சேவித்துக் கொண்டிருந்தனர். பல பெரிய சுவாமிகளும் இதில் பங்கு பெற்றிருந்தனர். அருகிலிருந்த இளைஞன் ஒருவனை "பாசுரங்களின் பொருளும் தாற்பரியமும் அறிவையா?" என்று வினவினேன். தெரிந்து கொள்ளத்தான் வினவினேன். அவனோ இங்குள்ள பெரியவர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் எங்களைப் போல் கிளிப் பிள்ளைகள் தாம். அவர்களைப் போல எங்கட்கும் பக்திக்கும் ஈடுபாட்டிற்கும் குறைவில்லை" என்று கூறி முறுவலித்தான்.