பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்தும் - மறையாத சோதி 43 (3) தீபம் நா. பார்த்தசாரதி : பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் இன்று நம்மிடையே இல்லை. சுவாமி ஒரு ஸ்தாபனமாகவே வாழ்ந்தார். அவருடைய நினைவும் ஒருஸ்தாபனமாகவே நம்மிடையே இயங்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.

  • * * * * * * * * * * s : * * * * * * * *

சுவாமி அவர்கள் அவருடைய ஞானத்தாலும் நூலறிவாலும் உபதேசங்களாலும் திராவிட வேதசாகரமாக' வாழ்ந்தார். திராவிட வேதசாகரமகத் தமது கிரந்தங்கள் மூலமாகவும், விரிவுரைகள் மூலமாகவும் சீரஞ்சீவியாக இனியும் வாழ்வார். சுவாமி அவர்களின் பூதவுடல் மறைந்தாலும் புகழுடம்பு நீடிக்கும். திராவிடவேத சாகரம் வற்றாது. ஏனெனில் அந்த மகா புருஷர் தொட்டசாகரம். வரும் தலைமுறைகளுக்கு வேண்டிய ஞானவளம் இந்தச் சாகரத்தில் நிச்சயமாக நிரம்பியிருப்பதுதான் காரணம்." (4) சாண்டில்யன்: "காஞ்சியில் பிரதிவாதி பயங்கரர் குடும்பத்தில் ஒரு குழந்தை வீறிட்டு அழுது கொண்டே பிறந்தது. அதற்கு அண்ணா என்று பெயரிட்டார்கள். உலகத்துக்கு ஒரு அண்ணா பிறந்தார், ரீவைணவ சம்பிரதாயத்திற்கு ஒரு ஜகதாசார்யர் தோன்றினார்." (5) டாக்டர் U.V. இராமாநுஜம்: P.B.A. சுவாமி நமது சம்பிரதாயத்திற்குச் செய்துள்ள தொண்டு வாசாம கோசரம். நம் சுவாமி எளிய நடையில் பூருவர்கள் கூறிய சுவை குன்றாமல் யாவரும் புரிந்து பயன் பெறும்படி வெளியிட்டுள்ள திவ்வியார்த்தங்கள் ஒரு முக்கியமான தேவையைப் பூர்த்தி செய்கின்றன. நாலாயிரப்பிரபந்தம் பூராவிற்கும் ஆழ்வான் பட்டர் இவர்கள் சாதித்துள்ள ஸ்தவங்களுக்கும் மற்றும் இரகசிய கிரந்தங்களுக்கும் சுவாமியின் வியாக்கியானங்கள் கைவிளக்குபோல பயன்படுகின்றன.