பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்தும் - மறையாத சோதி 49 இறுதி மூச்சு உள்ளவரை கோஷ்டியைப் பற்றிய நினைவு கொண்டிருந்தார். அவருடைய திருவுள்ளத்திற் கேற்ப ஆங்காங்கேயுள்ள வைணவர்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களைக் கற்றுக் கொண்டு அருளிச் செயல் கோஷ்டியைக் கட்டிக் காப்பதே நாம் சுவாமிகளுக்குச் செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாகும். (இ) நாளேடுகளில் கண்டவை : (1)தினமணி : வைணவ இயக்கத்தின் பேரரகராதியாகத் திகழ்ந்தவர். பன்மொழிப் புலவராகப் புகழோங்கி நின்றவர். நெடுங்காலம் வைணவம் வளர்த்த அண்ணங்கராசார்யர் சுவாமிகளின் பெரிய நூல் வரிசை திவ்வியார்த்த தீபிகை. கடல்மடை திறந்தாற்போல் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர். அவர் மறைவு ஈடு செய்ய முடியாத போழிப்பு. (2) The Indian Express Maha Vidvan Sri PratiVadi Bhayankaram Annangaracharya Swami is a giant among Vaishnava Scholars. A profound scholar both in Tami and Sanskrit he was a great exponent of Vaishnavite tenets of Sri Ramanuja. He was a prolific writer and has left a number of commentaries on the works of Alwars and Acharyars. His work ‘Divyartha Deepika’ is a monumnental work on the Tamil works of Alvars. He was considered as a walking Encyclopaedia on Vedic and Puranic lore; he was the receipients of many awards' including Presidents ‘Bharat Bhushan”. (3) The Hindu : Considered as an Encylopaedia in Vedic and Puranic lore. He popularised the works of Alwars and Acharyas.