பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. எழுத்தோவியங்கள் படித்தல், பேசுதல், எழுதுதல் என்ற மூன்றும் ஒரு வளர்ச்சிக்குத் துணைபுரியும் வழிகளாக அமைபவை. இவை மூன்றும் சுவாமியிடம் இயல்பாகவே அமைந் திருந்தவை. அற்புதமாகச் செயல்பட்டவை. இந்நிலையில் சுவாமியின் எழுத்தோவியங்களை நோக்குவோம். இவை பல திறப் பட்டவை. இவை நல்ல தாளில், புதிய எழுத்துகளில் வெளிவந்தால் சிறக்கும். வைணவ நூல்களில் அழகான பதிப்புகள் வெளி வராதிருப்பது வருந்தத்தக்கது. (1) திவ்விய பிரபந்த உரைகள் : நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திற்குத் தேனும் பாலும் கன்னலுமாகத் தித்திக்கும் வியாக்கியானங்களை எளிய நடையில் தெளிவாக எழுதியுள்ளார். இவையனைத்தும் ஆறு பதிப் புக்கு மேல் அச்சேறியுள்ளன. தற்சமயம் சில பகுதிகள் மட்டும் கிடைப்பதில்லை. அவை மறுபதிப்புச் செய்ய வேண்டிய நிலையிலுள்ளன. எவர் இதனைச் செய்வார் என்பது அந்த இறைவனுக்குத்தான் வெளிச்சம். (2) ஆசாரியர்களின் தமிழ்ப் பிரபந்த உரைகள் : ஆசாரியப் பெருமக்கள் அருளிச் செய்துள்ள உபதேசரத்ன மாலை திருவாய் மொழி நூற்றந்தாதி ஆர்த்திப் பிரபந்தம்' போன்ற தமிழ்ப் பிரபந்தங்கங்களுக்கும் அற்புதமான உரைகள் அருளியுள்ளார்கள் சுவாமிகள். (3) பூர்வாசாரிய தோத்திர உரைகள் : பூர்வாசாரிகள் அருளியுள்ள வடமொழித் தோத்திரங்களுக்கு சுவாமி