பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தோவியங்கள் 51 எழுதியுள்ளமை பேருதவியாகும். அந்தத் தோத்திரங்களுக்கு இதற்கு முன்னர் சுருக்கமான வடமொழி வியாக்கி யானங்களே இருந்து வந்தன. வடமொழி அறிவில்லாத அறிஞர்களும் பாமரரும் படித்துச் சுவைக்கும் வகையில் 'பஞ்சஸ்தவம்’, ‘பூரீரங்கராஜஸ்தவம் முதலிய சகல தோத்திரங்களுக்கும் மிகமிக அற்புதமான முறையில் தமிழுரைகள் அருளியுள்ளார் நம் சுவாமி. (4) ஆழ்வார் ஆசாரிய பெருமை நூல்கள் : ரீ ராமநுஜன் என்ற திங்கள் இதழில் வெளிவரும் எல்லாக் கட்டுரைகளுமே ஆழ்வார் ஆசாரியர்களின் பெருமைகளைப் பற்றியேயாகும். இவற்றைத் தனித்தனியே தொகுத்து ஆழவார்களுடையவும் ஆசாரியர்களுடையுமான பெருமை களை வெளியிட்டிருப்பது வைணவ உலகிற்குக் கிடைத்தற்கரிய கருவூலமாகும். ஆழ்வார்கள் கால நிர்ணயம் என்ற நூல் சிறந்ததோர் ஆராய்ச்சி நூலாகும். (5) இதிகாச, புராண வரலாற்று நூல்கள் : திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களில் குறிப்பிடப் பெற்றுள்ள இதிகாசங்களை யெல்லாம் திரட்டி திவ்வியப் பிரபந்த பகவத் பக்தாம்ர்தம்' என்றொரு நூல்; வான்மீகி ராமாயணம் முழுவதையும் சுருக்கமாக உரைநடையில்; இவை போன்றனவும் மற்றும் பிறவும் இப்பகுப்பில் அடங்கும். இவையும் கிடைத்தற்கரிய கருவூலமாகும். (6) இரகசியார்த்த விளக்க நூல்கள் : ரீ வைணவ சம்பிரதாயத்தில் இரகசியங்கள்' என்று வழங்கப் பெறுகின்ற 'முமுட்சுப்படி', 'தத்துவதிரயம்', 'பூரீ வசன பூஷணம்', ஆசாரிய ஹிருதயம் முதலிய நூல்களுக்கு மிக விரிவான வியாக்கியானங்களை எழுதியுள்ளார் நம் சுவாமி.' 1. திரு.பு.ரா. புருடோத்தம நாயுடு வெளியிட்டுள்ள ஆசாரிய ஹிருதயம், 'பூlவசபூஷணம்' போன்று அழகாகப் பதிப்பிக்கப் பெறவில்லை.