பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் (7) வேதாந்தப் பெருமாள் விளக்க நூல்கள் சுவாமி அவர்கள் எழுதிய நூல்களுக்குள் மிகச் சிறந்தது 'யூரீ பாடிய சாராம்ருதம்' என்ற நூலே என்று சுவாமியே குறிப்பிட்டுள்ளார்கள். மற்றும் பூரீ பகவத் கீதாசாரம்', 'புரீ விஷ்ணு சகஸ்ர நாம உரை போன்ற பல நூல்கள் இப்பகுதியுள் அடங்கும். ஒரு முறை "திவ்வியப் பிரபந்தங்களை தமிழ் வேதம் என்று சொல்வது தகாது. ரீ ராமாநுசருக்கு தமிழே தெரியாது" என்றெல்லாம் மனம் போனபடி எழுதிய ஒரு வித்துவானுக்கு மறுப்பாக "திரமிடோபநிஷத் பிரபாவ சாரார்த்தம்" என்றொரு நூலை வெளியிட்டார்கள் நம் சுவாமிகள். நாடு முழுதும் உள்ள பற்பல அறிஞர்களால் பாராட்டப் பெற்ற நூல் அது. (8) வேத இலட்சண் விசார நூல்கள் : சுவாமிகள் அவர்கள் இருபத்திரண்டு அகவைக்குள்ளே வேதம் ஒத முற்பட்டதால் முதலில் ஒன்றும் புரியாமல் சிரமமாக இருந்ததாகவும், தம்முடைய ஐயங்களைப் போக்கிக் கொள்ள வேத இலட்சண நூல்களையெல்லாம் ஆராய்ந்து தெளிந்ததாகவும் தம் 'சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்கள். தம் ஆய்வின் பயனை அனைவரும் பெற வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு "வேதாத்யயன சர்வஸ்வம் என்றொரு நூலை வெளியிட்டார்கள். இதனை ஆதரித்தும் மறுத்தும் பற்பல நூல்கள் வெளிவந்தன. இவற்றையொட்டி வேத இலட்சண விசார நூல்கள் பலவற்றை நம் சுவாமிகள் எழுதி வெளியிட்டார்கள். தம் 'சுயசரிதையில் சுவாமி இதைப் பற்றிக் கூறும்போது "வேதம் சுதந்திரம் என்றும், அது ஒரு கட்டுப் பாட்டிற்கு அடங்காதென்றும் அதில் நம்முடைய ஆராய்ச்சி செல்லாதென்றும், நினைத்திருப்பார் மலிந்த இவ்வுலகில் வேதத்தில் பதி பாடம் மட்டும் சுதந்திரம் அன்றென்றும் அது சாத்திர வரம்புக்கு அடங்கியதே என்றும், அதில் நம்முடைய ஆராய்ச்சி தாராளமாகச் செல்லும் என்றும் நிறுவி வெற்றி பெற்றவன் கடல் சூழ்ந்த