பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தோவியங்கள் 53 இப்பூவுலகில் அடியேன் ஒருவனே என்பதை விருப்பு வெறுப்பற்ற பெரியோர்கள் அறிவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளர்கள். (9) சத் சம்பிதாயார்த்த விளக்க நூல்கள் தென்னாச்சார்ய சம்பிரதாயத்தின் உண்மைப் பொருள்களை விரிவாக விளக்குவதற்காக எழுதப் பெற்ற நூல்கள் இவை. இவற்றுள் சத்சம்பிரதாயார்த்த சார நிதி' என்ற நூல் குறிப்பிடத்தக்கது. (10) லோகாபி ராம நல்வார்த்தை நூல்கள் உலகோர் இருக்க வேண்டிய விதம் யாது, பூரீ வைணவ லட்சணம் என்ன என்பது போன்ற நல் வார்த்தைகள் அடங்கிய நூல்கள் பல இப்பகுதியில் அடங்கும். "நல் வார்த்தை நானுறு” என்ற நூல் ஈண்டு குறிப்பிடத் தக்கதாகும்." (11) உபன்யாசக செளபாக்கிய நூல்கள் : சொற் பொழிவாற்றுபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பொருள்களைக் கொண்ட நூல்கள் இவை. ஆயிரக்கணக்கான தலைப்புகளில் சிறு சிறு கட்டுரைகள் கொண்ட நூல்கள் இப்பகுதியில் அடங்கும். “உபன்யாச சத்திவ்யம்" என்ற இருநூறு பொழிவுகள் கொண்ட நூல் குறிப்பிடத்தக்கது. சுவாமி தம் வாழ்நாளில் இறுதியாக வெளியிட்ட நூல் இப்பகுதியைச் சார்ந்ததே. "நகைச்சுவைக் கதைகளும் பக்திக் கதைகளும்" என்ற பெயருள்ள அந்த நூல் சொற்பொழிவுகளிடையே சுவையூட்டுதற்காகச் சொல்லக் கூடிய நாற்பது கதைகள் கொண்டது. (இந்த நூல் 1983-ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்தது) 2. சுவாமியின் தமிழறிவு சங்க இலக்கியங்கள் அகநானூறு, புறநானூறு என்பன போன்ற நூற்பெயர்களையொட்டி இங்ங்ணம் அமைக்கத் தூண்டியது என்று கருதலாம்.