பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் நான் திருப்பதியிலிருந்தபோது தாத்தாச்சாரியார் சுவாமி என்ற பெரியார் (வடகலை சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்) நாக்கில் நரம்பின்றி நம் சுவாமியை வைது எழுதிய நூலொன்றினைக் கண்டதுண்டு. அப்போது நான் திவ்வியார்த்த தீபிகையில் ஆழங்கால் பட்டிருந்த காலம். அருவருப்புடன் அதனைப் படித்தேன். கருத்துகளை மறுக்கலாம். மனிதரைத் திட்டலாகாது. இங்ங்ணம் நம் சுவாமியை அந்த சுவாமி திட்டியதைப் படித்தேன். மனம் கூசியது. ஆனால் பெருந்தகை திரு. TA. கிருஷ்ணசாரியார் சுவாமி (தென்கலையார்) அவரிடம் மிக அன்பாகப் பழகுவதையும் அவருடைய சொற்பொழிவுகளில் தாமும் கலந்து கொள்வதையும் சில சமயம் ஒட்டிப் பேசுவதையும் கண்டு மகிழ்வதுண்டு. அந்த சுவாமியின் உயர்ந்த பண்பாட்டைக் கண்டு இன்றும் மகிழ்கிறேன். ஏழுமலையான் கண்கண்ட தெய்வம்; என்னை ஆட்கொண்ட பெருமான். அவரை வணங்குவதுடன் என் கடமை நிறைவேறும். பெரியோர்கள் நேருக்கு நேர் மோதுவதை விரும்புவதில்லை. கருத்து மோதல்களை ஆர்வத்துடன் படிப்பதுண்டு. திங்கள் இதழ்கள் : மலை நாட்டில் பட்டாம்பி என்ற ஊரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த விஞ்ஞான சிந்தாமணி என்ற சமஸ்கிருத இதழுக்கு பன்னிரண்டாம் அகவையிலேயே கட்டுரை வரைந்து அனுப்பிக் கொண்டிருந்தவர் நம் சுவாமி, பின்னர் இளமையில் ரீமத் காதி சுவாமி துவக்கிய மஞ்சுபாஷிணி என்ற இதழின் ஆசிரியராக இருந்து நடத்தி வந்தார்கள் நம் சுவாமிகள். சில ஆண்டுகள் இது வார இதழாகவும் வெளிவந்து கொண்டிருந்தது. "வனமாலிகை", "பிரம்மவித்தியா" என்ற தமிழ் இதழ்களும் சில ஆண்டுகள் வெளிவந்தன. காதி சுவாமியின் காலத்திற்குப் பிறகு இவை நின்று விட்டன. 1932-இல் திருஅரங்கத்தில் "அம்ருதலகரீ" என்ற இதழ்