பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ2 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் ஒரு பொருளுக்கு இசையும் அடைமொழியை மற்றொரு பொருளுக்கும் உபயோகிப்பதுண்டு. இங்ங்னே தமிழ் நூல்களிலுள்ள சம்பிரதாயம் ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் ஏறியுள்ளதை உணரவேண்டும் என்பர் நம் சுவாமி. நம் சுவாமி பெற்றிருந்த சங்க நூலறிவு பல சமயங்களில் அவருக்குக் கைகொடுத்துள்ளது; அவர்தம் இடையறாத தமிழ்ப் பணிகளுக்குப் பேருபகாரமாயிருந்தது. 'தமிழின் நரம்பறிந்தவன்' என்று தம்மைக் கண்டனக் கட்டுரைகளில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் நம் சுவாமி. மறுப்புரை மறுப்புரை ஒன்றிலும் சுவாமியின் தமிழ்ப் புலமையைக் காணலாம். ஒரு சமயம் நாச்சியார் திருமொழியில் (3:9) கஞ்சன் வலை வைத்தவன்று காரிருள் எல்லில் பிழைத்து' என்ற இடத்தில் எல்லில் - இரவில் என்று சுவாமி பொருள் கூறியதை தமிழ்ப் புலவர் ஒருவர் மறுத்து எல்லி என்பது பகலையே குறிக்குமாதலால், 'அல்லில் பிழைத்து' என்று பாடத்தையே திருத்த வேண்டும் என்றும் எழுதினார். அல்லும் பகலும் என்ற உலக வழக்கை அவர் தம் கருத்துக்கு அரணாகக் காட்டினார். ஆனால் நம் சுவாமியோ எல்லூர்ச் சேர்தரும் ஏறுடையினத்து (குறுந்.275) என்ற குறுந்தொகைப் பாடலின் அடியையும் மலை படுகடாத்தில் (அடி 416) வரும் எல்லினிப் புதினே' என்ற தொடரையும் அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய இராக்காலத்தை யுடையயாயிராய்' என்ற பொருளையும் காட்டி நாச்சியார் திருவாக்கின் தூய்மையை நிலை நாட்டினார். (நான் கண்ட நல்லது 1949 பக்.7) பெரும் புலவரையும் மருள வைக்கும் மறுப்புரை இது.