பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமிகளின் தமிழ்ப் புலமை 63 தீபிகை சிறப்பு விளக்கக் குறிப்புகள் : இவற்றாலும் சுவாமிகளின் தமிழ்ப் புலமை பளிச்சிடும். (1) ஆழ்வார் பாசுரத்தின் பின்னணியில் இருக்கும் கருத்தினை எடுத்துக் காட்டுவர் ஆசாரியப் பெருமக்கள். அக்கருத்தின் உட்பொருளை எளிமையாக இன்று நாம் அறியும்படி தக்க எடுத்துக்காட்டுகளுடன் தெள்ளிதின் உணர்த்துவர் நம் சுவாமி, எடுத்துக்காட்டாக சாத்திரங்கள் எல்லாம் எம்பெருமானே எல்லாக் கல்யாணக் குணங்கள் உடையவன் என்றும், அவன் குற்றங்கட்கு எதிர்த் தட்டானவன் என்றும் குறிக்கின்றன. இதனைத் தெரிவிக்கும் வகையில், பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவ லுறுவீர் பிரிவகை யின்றிநன் னிதுய் - புரிவது வும்புகை பூவே (திருவாய் 1.6:1) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் பரிவதில் ஈசன் என்பதற்கு ஹேயப்ரத் யேகனான ஈசுவரனை என்று பிள்ளானும் பெரியவாச்சான் பிள்ளையும் உரைப்பர். இதனை நம்பிள்ளை விவரித்து, கல்யாண குண யோகத்தையும் சேர்த்து உரைப்பர். எம்பெருமான் எப்படிப் பட்டவன் எனில் பரிவதில் ஈசன் என்கிறார். அதாவது துக்கம் இல்லாதவன்; எம்பெருமானுக்குத் துக்கம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. பிராட்டியைப் பிரிந்து பட்ட துக்கம் அனைவரும் அறிந்ததே! ஆனால் பிறர் படும் துன்பத்தைக் கண்டு தானும் துக்கப்படுகை என்ற தயை குணம் எம்பெருமான் ஒருவனுக்கே உள்ள தென்றாகையால் இந்தத் துக்கம் குற்றமன்று என்று கூறுவர் நம் சுவாமிகள். இதனால் எம்பெருமானின் தயை என்னும் கல்யாண குணம் சொல்லப்பட்டது. உலகில் குழந்தைக்குத் துன்பம் நேர்ந்தால் அதனைப் போக்க வல்லவளான தாயும் கவனியாது இருந்து ஏமாந்து