பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் கலப்புடையனவாய் இருத்தலை நோக்கி நம் தமிழ் மக்கள் எளிதில் உணர்ந்து கொள்ளும் வண்ணம் இனிய தமிழ் நடையில் நூற்பொருளை நன்றாக விளக்கி இவ்விரிவுரை நிற்றலைக் கண்டு நாடொறும் கழிபேருவகை அடையா நின்றேன்.... ..... இவ்வினிய தமிழ் விரிவுரையின் பெருந்தகுதியை நோக்கி இவரை 'திவ்வியப் பிரபந்தப் பேராசிரியர் என்று சிறப்பித்துக் கூறுவே னெனின் அது கற்றார் பலருக்கும் உடன்பாடேயாம். - செந்தமிழாராய்ச்சி, 1943. பக். 124. (3) உ.வே.சா. பாராட்டு: தமிழ் தாத்தா என்று அன்புடன் வழங்கப்பெறும் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் நம் சுவாமியினிடத்து பெருமதிப்பு வைத்திருந்தார். சுவாமி முதன்முதலில் தம் 27-ஆம் அகவையில் (கி.பி. 1917) முதன்முறையாக உ.வே.சா.வை மதுரையில் சந்தித்தார். அதன் பிறகு 1937 இல் குழித்தலையில் சந்தித்து உரையாடினர். சுவாமியின் பகவத்விஷய காலட்சேபத்துக்கு ஐயரவர்கள் பலமுறை சென்று கேட்டு இன்புற்றிருக்கிறார். பின்னர் சுவாமியின் திவ்வியார்த்த தீபிகையுரையைப் படித்துப் பயின்ற ஐயரவர்கள் தம்முடைய பெருமகிழ்ச்சியைப் பாராட் டுரையாக அளித்துள்ளார். "காஞ்சிபுரம் பி.ப. ரீமான் அண்ணங்கராசாரியர் அவர்களால் வரையப்பெற்று மாதந்தோறும் பதிப்பித்து வெளிப்படுத்தப்பெறும் திவ்வியப் பிரபந்த திவ்வியார்த்த தீபிகை என்னும் அரியதோருரையை உடனுக்குடன் படித்து இன்புற்று வருகிறேன். திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்கள் தமிழ் நூற்பயிற்சி மட்டுமே உள்ளவர்களும் அறிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் சுவாமியின் உரை அமைந்துள்ளது. இவ்வுரையாசிரியர்கள் பழைய வியாக்கியானங்களில்