பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் (7) யானையின் மொழியைப் பாகனே அறிவான்; எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பி போல்வாருக்கே தெரியும். பேரருளாளனோடே பேசுபவரன்றோ நம்பிகள்? (8) யானையினுடைய நிற்றல், இருத்தல், கிடத்தல், திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட வழக்கு; எம்பெருமானும், "கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி, மணிவண்ணா நீ கிடக்க வேண்டா...! உன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்' என்றும், "கிடந்தவாறு எழுந்திருந்து பேசு" (திருச்சந்த, 61) என்றும் சொல்லுகின்ற திருமழிசைபிரான் போல்வாருக்கு எல்லாவகையிலும் அடியன். (9) யானை உண்ணும்போது இறைக்கும் அரிசி பலகோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும். எம்பெருமான் அமுது செய்து சேவித்த பிரசாதத்தாலே பல கோடி பக்த வர்க்கங்கள் உய்விக்கக் காண்கின்றோமன்றோ? (10) யானைக்குக் கை நீளம்; எம்பெருமானும் "அலம்புரி நெடுந்நடக்கை ஆயன்" (பெரி. திரு. 1.6:2) அன்றோ? "நீண்டவத்தைக் கருமுகிலை" (பெரிதிரு. 2.5:2) (11) யானை இறந்த பின்பும் உதவும்; எம்பெருமானும் தீர்த்தம் சாதித்துத் தன் சோதிக்கு எழுந்தருளின பின்பும் இதிகாச புராணங்கள், அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதங்களை உதவுகின்றானன்றோ? (12) யானைக்கு ஒரு கையே உள்ளது; எம் பெருமானுக்கும் கொடுக்கும் கையொழியக் கொள்ளும் கை இல்லையன்றோ? 'விரும்பப்பட்ட பொருள்களைக் கொடுப்பதில் உறுதியான எண்ணமுடையவன்" (அர்த்தி தார்த்த பரிதாந தீட்சிதம்) (13) பாகனுக்கு வாழ்க்கைக்குரிய பொருள்களைச் சம்பாதித்துக் கொடுக்கும் யானை, எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகர்களுக்கு உதவுவான்.