பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

காஞ்சி வாழ்க்கை


கள் மாமியார் வீட்டுக் கொடுமைக்கு அவ்வாறு செய்து கொண்டாலும் தவறு இல்லை என்ற அளவுக்குப் பேசினர். எனினும் என் உள்ளம் அவ்வாறு செய்து கொள்ளத் தயங்கியது. ஆயினும் அவர்கள்–மாமியார் வீட்டார் உண்மையில் நான் மறுமணம் செய்துகொள்வதை விரும்புகிறார்களா என அறிய விரும்பியது. அதுபற்றி என் நண்பர்களிடம் கலந்து பேசினேன். சிலருடைய உதவியினால் ஒரு ஏற்பாட்டினை மேற்கொண்டேன்.

என்னுடன் அண்ணாமலையிற் பயின்ற ஆறுமுகப்பெருமாள் என்பார் தற்போது நெல்லையில் பணியாற்றுகின்றார், அவர் மூலமாக ஐம்பது ‘மண இதழ்’ அச்சிட்டு அனுப்ப ஏற்பாடு செய்தேன். பேருக்குக் குணமங்கலம் என்ற ஊரில் எனக்கும் ஒரு பெண்ணிற்கும் திருமணம் நடப்பதாக அவள் அண்ணன் அழைப்பதாகப் பத்திரிகை அச்சிட்டு அனுப்பச் சொன்னேன். எல்லாம் கற்பனையே. குணமங்கலம் என்ற ஊரும் கற்பனைப் பெயர் என்றே எண்ணினேன். ஆனால் அது தஞ்சையில் உள்ள ஒரு ஊரின் பெயராகிப் பெற்றவர்களுக்குப் பெருந்தொல்லை கொடுத்ததை பின்னர் அறியப் பெரிதும் வருந்தினேன்.

பள்ளிக்கூட நாள் ஒன்றில்–அன்று வா. தி. மா. அவர்களோ பெரியவரோ இல்லை—அந்த இதழ் வந்து சேர்ந்தது. ஆசிரியர் அனைவருக்கும் அதை அளித்தேன். ஒரு இதழை உறையிலிட்டு என் அன்னையாருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். என்னுடன் எங்கள் ஊரிலிருந்து வந்து பணியாற்றிய அன்பர் ஒருவர்வழி அதைக் கொடுத்தனுப்பி, அன்று மாலையே புறப்படுவதாகச் சொல்லி (மணம் மூன்றாம் நாள்) அன்பர்கள் தந்த பண உதவியோடு மாலை 4-30-க்குப் புகைவண்டியில் செங்கற்பட்டை நோக்கிப் புறப்பட்டேன். அங்கே சென்று தெற்குநோக்கிச் செல்லும் வண்டியில் எது முந்தியது எனக்கண்டு அது பொழுது விடியும் போது எங்கே செல்லும் என்று அறிந்தேன். திருவனந்தபுரம் விரைவு