பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

காஞ்சி வாழ்க்கை



காஞ்சிவாழ்க்கை ஒருசில ஆண்டுகளே அமைந்தன என்றாலும் பல நூற்றாண்டுகளில் பெறத்தக்க அனுபவங்களை நான் அங்கே பெற்றுவிட்டேன். பின் எனது சென்னை வாழ்வுக்கு அங்கே பெற்ற அனுபவங்கள் எனக்குக் கைகொடுத்து உதவின. என் உடன் இருந்த ஆசிரியர் பலரும் என்னிடம் நன்கு கலந்து பழகினர். அப்படியே என்னிடம் பயின்ற உயர்வகுப்பு மாணவர்களுள் பலரும், நான் வயதில் இளைஞனாக இருந்த காரணத்தால், நெருங்கிப் பழகினர். ஊரில் உள்ள அன்பர் பலரும் என்னிடம் அன்பொடு ப்ழகினர். எனவே நான் காஞ்சியில் பல நல்ல அன்பர்களிடையே வாழ்ந்து வந்தேன். ஓரிரு திங்கள் ஊரிலிருந்தே நாள் தோறும் ரெயிலில் வந்தபோது சோர்வும் பல தடங்கல்களும் உண்டான் காரணத்தால் என் அன்னையர் என்னைக் காஞ்சியிலேயே இருக்குமாறு பணித்தார்கள். அதே வேளையில் மறுமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் அங்கே இருக்கவேண்டும் எனவும் வற்புறுத்தினர். எனது இத்துணை மாற்றங்களுக்கு இடையிலும் எனது மாமியார் வீட்டில் மாற்றமொன்றுமில்லாத வாழ்வினைக் கண்டேன். இரண்டொரு திங்கள் கழித்து, பள்ளிக்கு அருகிலேயே முதலில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன். பிறகு என் மாணவ நண்பர் ஒருவர் வழியே வேறு நல்ல இடமாக அவர்கண்ட ஓரிடத்துக்கு மாற்றிக்கொண்டேன். அங்கே அந்த ஆண்டு எல்லைவரை--சுமார் ஐந்தாறு திங்கள் இருந்தேன். அதற்குள் மறுமண ஏற்பாடுகள் நடை பெற்றன.

பள்ளியில் பல நல்லாசிரியர்கள் இருந்தனர். உயர் வகுப்புகளை எடுத்த திருவாளர்கள் பாக்கியநாதன், பால் ஜோசப், எட்வட்சாமுவேல், அதிசயம் போன்றோர் அனுபவ மிக்க நல்லாசிரியர்களாய் இருந்தனர். அப்படியே இடை நிலை வகுப்புக்களில் மத்தேயு, சாலமன், ராஜமணிச் செல்லையா போன்ற பலரும் எனக்கு நன்கு அறிமுகமாயினர். அவர்களுள் சிலர் தமிழ் பயிலவேண்டும் என்ற