பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6. அரசியல் அலைகள்:-
தேர்தலும் தெளிதலும்

நான் காஞ்சியில் வாழ்ந்திருந்த காலம் ஓர் அரசியல் மாற்றக் காலம். ஆங்கிலேயர் மக்களுக்கு ஓரளவு சுய ஆட்சி நல்கி ஆங்காங்கே தேர்தல் நடத்தி, சட்டசபைகளை அமைத்து, அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்த காலம். இந்தியா முழுவதிலும் அந்தக் கொந்தளிப்பும் தேர்தல் ஆரவாரமும் நிறைந்திருந்தன. நான் செங்கற்பட்டுப் பள்ளியில் பயின்றிருந்த காலத்தில் என் ‘இளமையின் நினைவில்’ குறித்தபடி, ஒருபுடை அரசியலிலும் மேல்போக்காகப் பங்கு கொண்டிருந்தேனாயினும் பிறகு அதில் தலையிடவில்லை. எனி னும் காஞ்சி வாழ்க்கை என்னைத் தலையிட வைத்துவிட்டது.

தமிழகத்தில் எங்கும் தேர்தல் முழக்கம். காங்கிரஸ் நாடெங்கும் பெருவெற்றி பெற்றமை போன்றே இங்கும் பெற்றது, அதன்பயனாக திரு. ச. இராசகோபாலாச்சாரியார் அவர்கள் ‘சென்னை மாநிலத்தின்’ முதலமைச்சரானார். பல ஆந்திரர்களும் கன்னட மலையாள நண்பர்களும் அந்த அமைச்சரவையில் பங்குகொண்டிருந்தனர். மொழி வழி மாநிலம் பிரியாத அந்தக் காலத்தில் எல்லா மொழியினரும் ஆட்சியில் பங்குகொண்டிருந்தனர். அந்தக் காலத்தில் தமிழைப் பற்றி அதிகமாகப் பேசுவோரும் எழுதுவோரும் சிலர். ஆங்கிலத்தில் பேசினால் சிறப்பு–இந்தி பயின்றால் ஏற்றம்–சமஸ்கிருதம் கற்றால் சிறப்பு என்றெல்லாம் சிலர் எண்ணிக்கொண்டு செயலாற்றிய காலம் அது. எனவே முதலமைச்சர் பதவி ஏற்ற ஆச்சாரியார் தமிழ் நாட்டிலும் பிற சென்னை மாநிலப் பகுதிகளிலும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினர். ஒவ்வொருவரும் இந்தி படித்தாலன்றி