பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

காட்டு வழிதனிலே

மறைந்து பின் தொடரும் அம் மங்கை அருகில் இருப்பதை நான் உணர்கிறேன்.

திரித்த நுரையி னிடை நின்முகங்கண்டேன்

சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்

என்று கவிஞர் பாடியதுபோல அவளுடைய முகத்தின் சாயலை நான் எங்கும் காணமுடிகிறது. அவள் ஏன் என்னே இப்படிப் பின் தொடர்கிறாள். ஏன் எனக்கு மோனத் துணைவியாக வருகிறாள் என்பதை அறிய முடியவில்லை. ஆனால், அவளுடைய சூக்குமத் தோழமையிலே என் உள்ளம் புனிதமடைகிறது; வாழ்க்கை விவகாரங்களிலே நாளெல்லாம் உழன்றுபட்ட சிறுமைகளும், பெற்ற புன்மை உணர்ச்சிகளும் நீங்கி வானில் பறக்கத் தொடங்குகின்றது; வானில் பறக்கின்ற நிலையிலும் அவளுடைய தோழமையை ஆங்கு நன்கு துய்க்கின்றது. இவற்றை நான் தெளிவாக உணர்கின்றேன்.

இயற்கை அன்னையின் மடியில் தவழும் உலக மக்கள் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அன்ரறோ? அவ்வாறிருக்கக் குறுகிய பிரிவினைகள் செய்துகொண்டு சாதியென்றும், சமயமென்றும், நிறமென்றும், நாடென்றும் எல்லை வகுத்து, நலத்திற்காக எழுந்த மெய்நெறிகளையும் சரியாகப் புரிந்து கொள்ளாது வாதனைப்பட்டு மடிகின்றோமே, என்ன சிறுமை என்கிற எண்ணம் அப்பொழுது எழுகின்றது. அறிவைப் பெற்றுள்ள மனிதன் ஏன் இவ்வாறு தானே உண்டாக்கிக் கொண்ட விலங்குகளில் மாட்டிக்கொண்டு துன்பக் குழியில் வீழ்ந்து தவிக்-