பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மலேைேறும்போது 37 யாக மாறிய தன் தலே மயிரை உச்சியிலே சேர்த்து முடிந்திருக்கிருன்; நெற்றியிலே நிறைய வெண் னிைற்றை அணிந்து கொண்டிருக்கிருன். முனிவர் களும் பயந்து நடுங்கும்படியான காமம், வெகுளி, மயக்கம் என்பன போன்ற அசுரர்களை இறைவன் மாய்ப்பான் என்பதற்கு அடையாளமாக நிற்கும் வேலையும் அவன் கையில் வைத்திருக்கிருன், இருந் தாலும் ஒவ்வொரு சமயத்தில் அவனுடைய உள்ளம் தடுமாறுகின்றது. நெறியில்லா நெறியில் செல்ல விரும்புகின்றது. அதனல், அவன் முருகனை நோக்கிக் கதறுகின்ருன். உச்சியிலே சடையிருக்க உள்ளங் கையில் வேலிருக்க நெற்றியிலே நீறிருக்கக் கந்தையா என் நினைவு தப்பிப் போவதென்ஞே. இந்தப் பாட்டிற் பிறக்கும் சோகம் எங்கும் பரவுகின்றது. இறைவன் காதிலும் புகுகின்றது. கலங் கிய உள்ளம் அமைதி பெறுமாறு கருணை வள்ளல் புன்சிரிப்புடன் நோக்குகிருன். துறவி மலை உச்சியை அடைந்து, இறைவன் பாதத்தில் விழுந்து வணங்கி எழுந்து அவன் திருமுகத்தை ஆவலோடு அண்ணுந்து பார்க்கிருன். இறைவனிடம் மாருது பொலியும் புன்முறுவல் அவனுக்குச் சாந்தி அளிக்கின்றது. மேலே எடுத்துக் காட்டிய நாடோடி பாடல்கள் கால வரையில்லாது பழநியங்கிரியிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் புதைந்து கிடக்கும் பொருளும், இசையும் உள்ளத்தைக் கவர்கின்றன. அவற்றைக் கேட்பதும், அவற்றை வாய்விட்டுக் கூவும் அடியவர்களின் கூட்டத்தைக் காண்பதும் ஒரு தனி இன்பமாக இருக்கின்றன. 3.