பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரதியின் நகைச்சுவை 43 ஆளுல் ஹிந்து தேசம் அப்படி...இல்லை....தமிழ் நாடு மேற்படி மஹா பாதக ஜாப்தாவைச் சேர்ந்த தன்று, அன்று!’’ தமிழனுக்கு இந்தச் சூடு தேவையோ இல்லையோ தேவையென்ருல் இதுவே போதும், போதும். இப்படிச் சுறுக்கென்று படும் நகைச்சுவையும் அவர் வாக்கில் பிறந்திருக்கின்றது. நடிப்புத் தேச பக்தர்களைப் பற்றியும் பாரதியார் இவ்வாருன கார மான நகைச்சுவையைக் கொட்டி எழுதியிருக்கிருர் : 'நான் சோம்பருக்குத் தொண்டன். எனது நண்பர்களெல்லாம் புளியஞ் சோற்றுக்குத் தொண் டர்கள். சிலர் ம ட் டி லும் பணத்தொண்டர்; 'காலணு வின் அடியார்க்கும் அடியார். - 'ஆளுல், எங்களிலே ஒவ்வொருவரும் பேசு வதைக் கேட்டால் கைகால் நடுங்கும்படியாக இருக்கும். பணத்தொண்டரடிப் பொடி யாழ்வார் எங்கள் எல்லோரைக் காட்டிலும் வாய்ப் பேச்சில் வீரர். ஒருவன் வானத்தை வில்லாக வளைக்கலா மென்பான். ஒருவன் மணலைக் கயிருகத் திரிக்கலா மென்பான். ஒருவன், நாம் இந்த ரேட்டில் வேலை செய்து கொண்டு வந்தால் ஆங்கிலேயரின் வர்த்தகப் பெருமை ஆறு மாதத்தில் காற்ருய்ப் போய்விடும்: என்பான். மற்ருெருவன், சியாம்ஜி கிருஷ்ணவர்மா ஸ்வராஜ்யம் கிடைக்கப் பத்து வருஷமாகுமென்று கணக்குப் போட்டிருக்கிருர். ஆறு வருஷத்தில் கிடைத்து:விடுமென்று: எனக்குத் தோன்றுகிறது. என்பான் தவளைபுருவங் கொண்ட மூன்ருமொரு