பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திப்பான் நாட்டுக் கவிதைகள் 5? அகய்கோ” என விடையிறுத்தாள். இள நங்காய், நீ வேறு யாரையும் மணந்து கொள்ள வேண்டாம்; நானே உன்னை மணப்பேன்; பொறுத்திரு” என்று மொழிந்து'அரசன் மீண்டான். அம்மங்கையோ தோல் சுருங்கி, நரைதோன்றி, உடல் தள்ளாடும் வரையில் காதலுடனே அரசனை எதிர்பார்த்திருந்தாள். ஆளுல் அவனிடமிருந்து யாதொரு சேதியும் கிட்டவில்லை. அதனுல் ஆருத் துயர் கொண்ட பெண்மணி யூர்யகுவை ஒரு தடவை யாவது சாகுமுன் கண்ணினுல் காண விரும்பித் தலை நகருக்குச் சென்று அரசவையில் துழைந்தாள். முதுமை யடைந்திருந்த மன்னனுக்குத் தன் வர லாற்றை விவரித்தாள். அ ைத க் கேட்டதும், ‘ஐயகோ, பூடாரம் தாங்கும் சிரமத்தால் உன்னை முற்றும் மறந்தேனே' என்று அவலத்தில் மூழ்கினன் அரசன். அத்துன்பப் பெருக்கால் இரு கவிகளும் பாடினன். அப்பெண்மணியும் தன் வாழ்க்கை முடிந்துவிட்டதை எண்ணித் துயரமும், காவலனைக் கண்டதால் ஆனந்தமும் கொண்டு இரு கவிகள் பாடினுள். அவற்றில் ஒன்றுதான் மேலே காட்டிய பாட்டு. தனது இளமை வியர்த்தமானதால் இளங்கன்னி யரைக் காணும் போதெல்லாம் அந்நினைவு வந்து நெஞ்சம் புழுங்குகின்ருளாம் அவள். to நிப்பான் நாட்டிலே அனைவரும் இன்பம், துன்பம், கோபம் முதலிய உணர்ச்சிகளின் வயப்பட்ட போது கவி பாடுவார்கள். கவி பாடுதலே பண்பாட்