பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிகளின் தோற்றம்

67


போது அதில் வாழ எனக்கு விருப்பமில்லை" என்று சொல்லும்படியாகிவிட்டது. ஆனால் அவருடைய மறைவு உலகின் மேல் வெறுப்பாலோ அல்லது சலிப்பாலோ ஏற்பட்டதல்ல: அது பேரன்பால் ஏற்பட்டது.

இவருக்கு முன்னே பல பெரியார்கள் இதே அன்பு நெறியை உலகிற்குப் போதித்தார்கள். "ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்" என்று விரும்பினார் தம்மிடையே தோன்றிய இராமலிங்க வள்ளலார். "அனைவரும் இறைவனுடைய வடிவங்கள்: அனைவரும் ஒன்றே; அனைவருக்கும் அன்பு செய்யுங்கள்" என்று கூறிக் கொண்டு இராமகிருஷ்ண பரம ஹம்சர் வந்தார். அரசியலிலும், வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலுமே அன்பு நெறி சக்தி வாய்ந்தது என்று காந்தி அடிகள் காண்பித்தார். அவருடையர் கொள்கை ஏதோ கனவு காண்பவனுடைய ஆசையாக நின்றுவிடவில்லை. நாட்டின் விடுதலைக்கே அது வெற்றி வழியாயிற்று. இந்தியாவிற்கு அதனால் விடுதலை கிடைப்பது சாத்தியமாயிற்றென்றால் உலகில் எந்தக் காரியத்திற்கும் அது நிச்சயமாகப் பயன்படும் என்பது திண்ணம் அல்லவா?

சமய சஞ்சீவியாகக் காந்தி அடிகள் காட்டியுள்ள இவ்வன்பு வழியை மேற்கொள்ளாவிடில் மானிட சாதிக்கு இன்பமில்லை, உய்வில்லை என்பதைத் தெளிந்த சிந்தனையாளர்கள் பலர் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த நெறியைக் காட்டியதுதான்