பக்கம்:காதலா கடமையா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலா? கடமையா?


மறுக்காது நாட்டு நிலையை மறக்காது மாந்தர் நலத்துக்கு மாய்ந்திட மகிழ்ச்சிகொள் சாய்ந்து கொடுப்பாய் தலையை" என்றான்.

எதிர்பாராத இடிக்கு முடி சாய்த்தாள்; அதிர்ந்த மின்னலுக் கணுவும் இமைத்திடாள். தன்னலத் துக்கே எந்நிலை மைகளும் என்னும் தீயர் இருக்கும்இத் தரையைக் காணு தற்கும் நாணுவாள் போபோலஇறுக விழியை இமையால் மூடி

உறுதியாய்த் தன்னிரண் டுள்ளங் கைகளைக் கன்னம் இரண்டிலும் கவித்துக் குனிந்தே 'இன்னுடல் நாட்டுக் கிந்தா' என்று நின்றாள். அவள்குழல், நீல அருவி குன்றினின்று வீழ்வதென்று சொலும்படி சரிந்து விழுந்து தரையில் புரண்டது. திருந்து தங்கத் தேர், நடு முறிந்து விழுகையின் தோற்றம் விளைத்தது வளைந்தமெய்! வாளைக் குனிந்து மகிணன் எடுத்தான். காளையின் விழிகள் கவிழ்ந்த முகத்தை அடைந்தன. அவன் உளம் ஐயோ என்றது. தடந்தோள் கீரைத் தண்டாய்த் துவண்டது. தொட்டவாளைத் தூக்கவும் வலியிழந்து பட்ட மரம்போல், பாவையைப் பார்த்து நின்றான், மீண்டும்வாள் நிலத்தில் வீழ்ந்தது. திரும்பினாள். கண்டாள் செயலற்ற மகிணனைத் தரும்படி வேண்டினாள் தன்கையில் வாளை. வாளைத்தூக்கி வஞ்சிபால் நல்கக், காளை ஒருபாதிக் கருத் திசைந்தான்.

104

104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/105&oldid=1483554" இலிருந்து மீள்விக்கப்பட்டது