பக்கம்:காதலா கடமையா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பன்னுமோர் விடுதலைப் பட்டயம் இதுவாம்
அன்னை எனக்கு நீ, அருமைக் கொன்றைக்குத்
தன்னுயிர்விடவும் தயங்காக் கிள்ளையே
மகிணனுக்கென்று வாய்ந்த அமுது நீ.
இந்நிலம் இந்நாள் எதிர்பார்த் திருக்கும்
தன்னலம் மறுத்த தன்மைக்குத் தாயும்நீ!
தகுசீர்க்கொன்றை தழைத்து வாழிய!
மகிணன் கிள்ளையொடு வாழிய!” என்று
மன்னன் நெஞ்சார வாழ்த்தி நின்றான்.
மெருகடைந்து பொன் னங்கு மின்னியதுபோல
அருகிருந்த கிள்ளை அழகன் இருவர்
மகிழ்வடைந்து தாமரைமுகம் மலர
"வாழிய மன்னா" என்று
நாழிகை கருதி நடந்தார் துயிலவே.

 

106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/107&oldid=1484379" இலிருந்து மீள்விக்கப்பட்டது