பக்கம்:காதலா கடமையா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 37



(“நாங்கள் நல்கியதல்ல அவ்விடுதலை
நீங்கள் பெற்றீர் என்று நிகழ்த்தினான்”)


இடம்
கொன்றை நாட்டு
அரண்மனை மன்று.
உறுப்பினர்
மாழைப் பேரரசு,
கிள்ளை, மகிணன்,
அமைச்சன், ஒள்ளியோன்,
வாட்பொறை, தாரோன்.


ளங்கதிர் விளக்கம் ஏந்தக் குளம்,வயல்,
களம், கதிர் விளக்கம் கண்டன; கொன்றை
விழித்தது; வல்லிருள் அழிந்தது; நலத்தில்
செழித்தது; தீமை ஒழிந்தது; மக்கள்
எழுந்தனர். மன்னன் இருக்கும் மன்றில்
நுழைந்தனர் பல்லோர் நுழைய முடியாது.
தெருவில் நிறைந்தனர்; திருநகர் நிறைந்தனர்.
“வருவார்; நமக்கும் வாய்திறந் துரைப்பார்;
தருவதாய் உரைத்ததை இரவே தந்தார்;”
என்றார் பல்லோர். “அன்றாடந்தான்

107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/108&oldid=1484377" இலிருந்து மீள்விக்கப்பட்டது