பக்கம்:காதலா கடமையா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இப்படிச் சொல்லி ஏய்ப்பர்” என்றார்பலர்.
“தலைவர் வந்தார் தலைவர் வந்தார்
இலகுசீர்க் கிள்ளை இதோவந் திட்டாள்
தாரோன் வந்தான்; தகுதி மிக்க
வாட்பொறைதானும் வந்தான்” என்று
கடலென முழங்கினர்; கைகள் கொட்டினர்.
மன்றின் அழகிய மாடி உச்சியில்
நின்று. கடல்மிசை நிறைந்த பரிதிபோல்
மலர்முகம் காட்டினான். மக்கள் மகிழ்ந்து
கலகல என்று கைதட்டினார்கள்.
“வாழ்க மன்னன் வாழ்க மன்னன்”
என்று வாழ்த்துரை இயம்பி னார்கள்.
வையம் பயன் மழை கண்டது போலச்
சிரித்த முகத்தொடு தெரிந்தாள் கிள்ளை.
பருத்ததோள் மகிணனைப் பார்த்தார் அண்டையில்,
வாட்பொறை தாரோன் மகிழ்வோடு நின்றார்.
தோட்புறம் தாடி தொங்கும் அமைச்சன்
மன்னன் அண்டையில் நின்றி ருந்தான்.
ஒள்ளியோன் இருந்தான்; உடன் பலர் இருந்தார்.
மாழை நாட்டின் மாப்பேரரசன்
“வாழிய கொன்றை மக்களே” என்றான்.
“கொன்றை விடுதலை கொண்ட” தென்றான்.
நன்றென மக்கள் நனிமகிழ்ந் தார்கள்.
“நாங்கள் நல்கிய தல்ல அவ் விடுதலை
நீங்கள் பெற்றீர் என்று நிகழ்த்தினான்.”
மக்கள் வியந்தனர் மகிழ்வு கொண்டனர்!
“நானே உங்களை நலிவு செய்தேன்.
தானது பொறாத தங்கவேல் தற்கொலை
செய்துகொண்டான். செய்தி யறிந்துநான்

108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/109&oldid=1484374" இலிருந்து மீள்விக்கப்பட்டது