பக்கம்:காதலா கடமையா.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எய்திய துன்பம் இயம்பொ ணாததே
என்றன் உளத்தை இரங்கச் செய்தது
தன்னல மற்ற தங்கவேல் சாவே.
இன்றிரவு நான் ஓர் இலக்கியம் பெற்றேன்.
தன்னிகர் இல்லாத் தனியெழிற் கிள்ளை
என்னை யடைதல் வேண்டும் என்றேன்.
அடையாள் ஆயின் அளியேன் விடுதலை
என்றேன். அதற்கே எழிலுறு கிள்ளையைக்
கொன்று போடக் கொடுவாள் ஏந்தி
மகிணன் கிள்ளைபால் வந்தான். கிள்ளை
தூங்கினாள்! மகிணன் தொடங்கினான் கொலையை.
ஏங்கினான்.விம்மினான். இருகை நடுங்கின.
அழகில் ஒருத்தியின் அகத்தில் மகிணனை
எழுதிவைத் திருந்தாள்; அவனும் அப்படி.
மகிணன் கைகள் மங்கையைக் கொல்லத்
தகும்வலி இல்லைவாள் தவறி விழுந்தது.
மங்கை விழித்தாள். மகிணனைக் கண்டாள்.
'எங்கு வந்தீர்கள்' என்று கேட்டாள்.
'கொல்லவந்தேன்' கொன்றை நாட்டுக்கு
நல்ல விடுதலை நாட்டவேண்டும்
என்றான். எழுந்து நின்று பெண்ணாள்,
தன்தலை குனிந்தாள்; 'தமிழர் வாழ
என்னைக் கொல்லுக' என்று மொழிந்தாள்.
பின்னும் மகிணன், பெருவாள் தூக்கி,
ஒச்சமுடியா துழலும் போது
மீண்டும் கைவாள் வீழ்ந்தது நிலத்தில்!
மங்கை திரும்பி வாளை வாங்கி
எய்க விடுதலை ஓங்குக என்றுதன்

109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/110&oldid=1483666" இலிருந்து மீள்விக்கப்பட்டது