பக்கம்:காதலா கடமையா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமைச்சனை அணுகி, எப்போது விடுதலை என்றான் தங்கவேல். அரசனின் கருத்தை அறிவித்தான் அமைச்சன். கிள்ளை அங்ஙனமே செய்து நாட்டைக் காக்கலாமே என்றான் தங்கவேல். 'இருவரின் காதலில் இன்னொருவர் தலையிடல் சரியல்ல' என்று புகன்று சென்றான் அமைச்சன்.

    மக்கள் உரிமைக்காக ஆர்ப்பரித்தனர். அவர்கட்கு ஆறுதல் கூறி அனுப்பிவிட்டு, அரசனையடைந்தான் தங்கவேல். அரசன் கிள்ளையின் கருத்தை வினவினான். தாங்கள் நேரே செல்லின் கிள்ளை வயப்படுவாள் என்றான் தங்கவேல்.
    மங்கையை நோக்கி மன்னன் நடந்தான். தன் கருத்துரைத்துக் கசிந்தான். மங்கையின் மனமோ மாறவேயில்லை. ஏமாந்த அரசன் ஏகினான் வெளியே.
     பின்னர் அரசன் ஒள்ளியோனிடத்தில், அமைச்சன் தனக்கு ஒத்துவராததை உணர்த்தி, நீயாவது ஒத்துழைக்க வேண்டு மென்று கேட்டுக்கொண்டான். அப்போது, உரிமைக்காக ஆர்ப் பரித்த(வாட்பொறையின் மாமன் மகனாகிய) தாரோன்முதலிய அனைவரையும் கடிந்து பேசி அனுப்பினான் ஒள்ளியோன்.

பின்பு, கொன்றைநாட்டு மக்கள்மேல் குற்றம் பல சுமத்தி, அதன் வாயிலாக மகிணன் முதலிய தலைவர்களைச் சிறையி லிட வேண்டும் என்று மன்னனும் ஒள்ளியோனும் சூழ்ச்சி செய்தனர். அதன்படி மன்னன் கிழவனாகவும், ஒள்ளியோன் கிழவியாகவும் உருக்கொண்டு ஊர் சுற்றினர். மக்களின் சீர் திருத்தம், முன்னேற்றம்முதலியவற்றைக் கண்டு ஒவ்வொன்றை யும் குற்றமெனக் குறித்தனர். மன்னன்கட்டளைப்படி மகிணன், வாட்பொறை, தாரோன் முதலியோர் சிறைப்பட்டனர். ஒருவரும் வெளியில் உலவாதபடி மக்களும் துன்புறுத்தப்பட்டனர். கிள்ளையை வயப்படுத்துமாறு தங்கவேல் அனுப்பப்பட்டான்.

11

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/12&oldid=1483919" இலிருந்து மீள்விக்கப்பட்டது