பக்கம்:காதலா கடமையா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 4


("பெருமக்கள் கூட்டம் பெருவானம் போன்றது
திருமிக்கான் முகம் செழுநிலவு போன்றது.")


இடம்
கொன்றை நாட்டின்
தெருக்கள்.
உறுப்பினர்
மாழைப் பேரரசு,
மக்கள்.


"புலர்ந்தது புதுநாள் புதுநாள், என்றனர்.
மலர்ந்தன முகங்கள், மலர்ந்தன உள்ளம்.
எங்கணும் ஆர்வம், எங்கணும் எழுச்சி,
கொன்றை நாடு கொள்ளா மகிழ்ச்சியில்
அன்று குளித்தது,

காற்சி லம்பு கைவளை குலுங்க,
மேற்பொன் னாடை விண்ணில் மிதப்ப,
இல்லம் புதுக்கினர் மெல்லியர்; அழகின்
செல்வம் விளைத்துச் சிறப்புச் செய்தனர்.

வாழையும் தெங்கும், வளர்தரு கமுகும்,
தாழைப் பெருங்குலை தாங்க வரிசையாய்
அடர்ந்தன. வானை அளாவும் பந்தர்கள்
தொடர்ந்தன, இடைவெளி தோன்றா வண்ணம்.

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/24&oldid=1484267" இலிருந்து மீள்விக்கப்பட்டது