பக்கம்:காதலா கடமையா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதலா? கடமையா?

கையலைத்து யானைக் கடற்படை வந்தது.

வையத்தில் காலும் வானத்தில் முடியுமாய்த்
தேர்ப்படை வந்தது.

சிம்புள் வடிவின் அம்பாரி மீதில்
செம்பரிதி போலத் திருமாழைப் பேரரசு
வீற்றிருக்க, விரிகருங் கடல்போல்
தோற்றஞ்செய் யானை சுமந்து வந்தது.

பெருமக்கள் கூட்டம் பெருவானம் போன்றது.
திருமிக்கான் முகம் செழுநிலவு போன்றது.

செவியெலாம் இன்னிசை, செழுமணம் மூக்கெலாம்
தவழ்ந்தன.

திருவுலாப் போந்த மன்னன்
ஒருபொது மன்றில் உற்றிருந் தனனே.

 

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/26&oldid=1484268" இலிருந்து மீள்விக்கப்பட்டது