பக்கம்:காதலா கடமையா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 5


(“பாலின் நுரைநிகர் பருத்தி உண்டெனினும்
மேலுக்கோர் கந்தை மிஞ்சவில்லை.”)


இடம்
கொன்றையில்
ஊர்ப் பொதுமன்று
உறுப்பினர்
மாழைப் பேரரசு,
கொன்றைத் தலைவர்கள் மக்கள்.


ர்ப்பொது மன்றில் மாப்பே ரரசன்
சீர்ப்பெரு மேடையிற் சென்றமர்ந்தான்.
அமைச்சன் அருகில் இருந்தான்.

கொற்றவன் பேரால் கொன்றை நாட்டில்
உற்றர சாளும் ஒள்ளியோன் இருந்தான்.

நாட்டை முன்னின்று நடத்து கின்ற
வாட்பொறை இருந்தான், மகிணன் இருந்தான்,
தாரோன் இருந்தான், தங்கவேல் இருந்தான்.
தலைவன் மகிணன் எழுந்தான்.

பொலந்தார் மன்னற்கு நலம்பல புரிந்து
தலை வணங்கிச் சாற்றுவா னானான்:

“ஆழிசூழ் வையத் தழியாப் பெரும்புகழ்
மாழை நாட்டு மாப்பே ரரசே!
வாழிய!

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/27&oldid=1484517" இலிருந்து மீள்விக்கப்பட்டது