பக்கம்:காதலா கடமையா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 6


(“விடுதலைப் பட்டயம் விரைவில் எழுதி முடிப்பதாய் மன்னன் மொழிந்தான்”)


இடம்
கொன்றையில்
ஊர்ப் பொதுமன்று
உறுப்பினர்
மாழைப் பேரரசு,
கொன்றைத் தலைவர்கள் மக்கள்.


“வாழிய! கொன்றை நாட்டு மக்களே! அந்தக்
கோழி நாட்டான் கொடியவன் கண்டீர்.
அன்னோன் இந் நாட்டின் அருகில் வாழ்கின்றான்;
என் நாட்டின்மேல் எரிவுகொண் டுள்ளான்;
படை திரட்டுகின்றான்.

மாழை நாட்டை மாய்த்திட எண்ணினான்.

ஆதலின்,
மாழை நாடும் மாப்பெருங் கொன்றையும்
என்றும் போரில் ஒத்திருத்தல் வேண்டும்
அப்படி நமக்கும் ஓர்ஒப்பந்தம் தேவை.

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/29&oldid=1484602" இலிருந்து மீள்விக்கப்பட்டது