பக்கம்:காதலா கடமையா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 7



(“தெள்ளுநீர் ஆடுவார்க் கண்டான்.
கிள்ளையைக் கண்டான் உள்ளம் இழந்தானே”)


இடம்
மாடி நிலா முற்றம்
சோலை.
உறுப்பினர்
மாழைப் பேரரசு,
கிள்ளை.


மாடியில் துயின்ற மன்னன் எழுந்தான்.
பாடி வாழ்த்திய பலரையும் அனுப்பிக்
காலைக் கடனைக் கடிது முடித்தான்.
பாலில் நனைந்த பண்ணியம் அருந்தி
ஏட்டை எடுத்தான்; எழுதுகோல் தொட்டான்;
நாட்டுக்கு விடுதலை நல்குதல் எழுத
எச்சொல் புணர்ப்ப தென்று நினைத்தான்.
“அச்சொல் அமைக்க அமைச்சன் அறிவான்”
என்றான். எழுந்தான் இளங்கதிர் எழுந்து
பொன்ஒளி கொழிக்கும் புதுமை காண
மாடிநிலா முற்றம் வந்து லாவினான்.

பாடின பறவைகள், பருகினான் செவியால்.
மலர்மணம் தூக்கி வந்தது காற்று.

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/31&oldid=1484613" இலிருந்து மீள்விக்கப்பட்டது