பக்கம்:காதலா கடமையா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 8


(“செம்மாதுளை உடைந்ததெனச் செவ்விதழ் மின்னிக்
கொடிமுல்லையெனக் குலுங்கச் சிரித்தாள்.”)

இடம்
மாடி நிலா முற்றம்
சோலை.
உறுப்பினர்
மாழைப் பேரரசு,
நீராடியோர், மக்கள், அமைச்சன்


விண்மீன் எனப்பலர் விளங்க, நிலாமுகப்
பெண்ணாளைக் கண்ட பேரரசு வியந்து
கொடுத்ததை வாங்காக் கொடையா ளர்போல்
விடுத்த விழியை மீட்கா திருந்தான்.
நீரா டியபின் நீள்விழி மடந்தையர்,
நனைஉடை நீக்கி நல்லுடை உடுத்தனர்
கனியிதழ், கண்ணாடிக் கன்னஞ் சிவக்கச்
சிரித்தபடி சென்றார்; வியர்த்தபடி நின்றான்!

மன்னனின் பின்புறமாக
அமைச்சன் வந்தே “அரசே!” என்றான்
இமைக்காது பார்த்தவன் இப்புறம் திரும்பி,
“உள்ளம் கொள்ளை கொண்டு பிள்ளையன் னம்போல்
தெள்ளுநீர் ஆடிச் செல்கின்றாள் அதோ,

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/33&oldid=1484270" இலிருந்து மீள்விக்கப்பட்டது