பக்கம்:காதலா கடமையா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலா? கடமையா?

 அவள்யார்? அமைச்சனே! அவள் யார்?" 
 என்றான்.
 "தவழ்முகில் போலும் தாழ்குழலுடன் அதோ
 இடதுகை முடக்கி இடைமேல் ஊன்றித்
 தடமலர்க் கையசைத்துத் தனி ஒருவஞ்சிக்
 கொடிஇடை துவளச் சிலம்பு கொஞ்ச 
 நடையழகு காட்டும் நாடக மயிலா? 
 அவள்தான்
 மகிணன் உள்ளத்தில் வாழும் கிள்ளை,
 அவனும் அவள்பால் அன்பு மிக்கவன். 
 நேற்றுமாவை, நேரிழை, தென்றற் 
 காற்றினில் உலவுதல் கண்டு யார்என 
 ஒள்ளி யோனை உவப்புடன் கேட்டேன்.
 வெள்ளையாய் அப்படி விளம்பினான் 
 என்னிடம்
 விண்ணோ நிலவால் விளக்கம் அடைந்தது.
 தண்கடல் முத்தால் தனிச்சிறப் புற்றது. 
 தரையோ தானறிந்தது பிறர்க்குச் சாற்றும் 
 அருமை மக்களால் பெருமை பெற்றது. 
 மாண்புறு மக்களோ மங்கையர் தம்மால் 
 தள்ளொணாப் பெருமை சார்ந்தனர்—
 மங்கைமார் 
 கிள்ளை ஒருத்தியால் கெடாதசீர் பெற்றனர்; 
 யான்பெற்ற முதுமையும் இவள்போல் 
 ஒருமகவை 
 ஏன்பெறா திருந்தேன் என்றவா வுற்றது!”
 "பழி ஒன்று சொல்லப் படாத மேனி 
 அழகால் வையத் தாட்சி நடாத்தினாள்' 
 என்றான் அமைச்சன். இவ்வுரை வேந்தற்கு 
 நின்றெரி தீயில் நெய்யா யிற்று.
 மன்னன் சொன்னான்:
 "அன்புடை அன்னை என்னை 
 வளர்க்கையில்
                     33
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/34&oldid=1484659" இலிருந்து மீள்விக்கப்பட்டது