பக்கம்:காதலா கடமையா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 10



(“ஓர்உளம் பெருநாட்டை ஓம்புதல் ஒண்ணுமோ?
சீருளம் ஒருநாள் தீயுளம் ஆகும்”)

இடம்
கொன்றை நாட்டில்
ஒரு தனியிடம்
உறுப்பினர்
தங்கவேல்,
மகிணன்


“நாளும் சொற்பெருக்கு நடத்தியும் அலைந்தும்
தோளும் உள்ளமும் துன்புறப் பெற்றேன்.
இன்றுதான் அமைதி எய்தினேன். மக்கள்
‘என்று விடுதலை என்று விடுதலை’
என்று பன்னாளாய் இடரில் மூழ்கினர்,
இன்றுதான் மகிழ்ச்சி எய்தினர்” என்று
தங்கவே லிடத்தில் சாற்றினான் மகிணன்.

“நாட்டுக் கான நல்ல சட்டங்கள்
தீட்டுதல் வேண்டுமே. திருநாட்டி னின்று
மாழை நாட்டின் மாப்பெரும் படையும்,
ஆழக் குந்தி அலுவல் பார்க்கும்
ஒள்ளியோன் கூட்டமும் ஒழிந்தபின் இங்குக்
கிள்ளைக்கு மணிமுடி கிடைக்கும் வண்ணம்

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/38&oldid=1484441" இலிருந்து மீள்விக்கப்பட்டது